Saturday, July 20, 2013

கீழக்கரையில் 26/07 வெள்ளிக்கிழமை நகராட்சியை கண்டித்து தமுமுக ஆர்ப்பாட்டம்!



19 07 2013 அன்று கீழக்கரை நகர் தமுமுக நிர்வாக கூட்டம் நகர் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தமுமுக நகர் தலைவர் முகம்மது சிராஜுதீன் தலைமையில் நகர் துணைத்தலைவர் கோஸ் முகம்மது முன்னிலையில் நகர் நிர்வாக கூட்டம் நடைபெற்று. இறுதியாக தீர்மானங்கள் நிரைவேற்றப்பட்டது.

தீர்மானங்கள் பற்றி நகர் தலைவர் முகம்மது சிராஜுதீன் பத்திரிக்கையாளரிடம் கூறுகையில் :

  1. கீழக்கரை நகராட்சி யில் தொடர்ந்து நடைபெறும் சீர்கேடுகளை  கண்டித்து  மற்றும் முறையான குடிநீர்  வழங்க கோரியும் வரும் 2 6/07/13 அன்றுவெள்ளிக் கிழமை முஸ்லீம் பஜாரில் பகல் 2 மணிக்கு ஆயிரக்கணக்கன பொதுமக்களை திரட்டி கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும்

2 புனித ரமலான் மாத பித்ராக்களை வசூல் செய்து அதிகமான ஏழை எளிய மக்களுக்கு பெருநாள் கொடை வழங்குவது.  

3.   ஜுலை 15 க்குள் அனைத்து மக்கள் நல பணிகளும் நிறைவேற்றப்படும் என்று கீழக்கரை நகராட்சி அதிகாரிகள் அழித்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும்.

 பேட்டியின் போது மூத்த தலைவர் அன்பின் அசன், நகர் செயலாளர் பவுசுல் அமீன், ஒன்றிய செயலாளர் சாதிக், மமக செயலாளர் இக்பால், வர்த்தக அணி செயலாளர் சலீம்,  மமக துணை செயலாளர்  புகாரி PRO கமால் நாசர் மற்றும் ரிபாக், , வளைகுடா நிர்வாகி கீழை. இர்பான், 9 வார்டு நிர்வாகி மாலிக் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.