பழங்களிலேயே தனிச்சுவை கொண்டது பேரிச்சம் பழம்.இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். பதப்படுத்தப்பட்டால் இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது
பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். மருத்துவக் குணம் கொண்டவை. பாலைவனப் பகுதி மக்களுக்கு எளிதில் டைக்கும் .
பேரிச்சம் பழங்கள் ஆப்ரிக்க, ஈரான், ஈராக், சவுதி அரேபியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு நாடுகளில் அதிகளவில் பேரீச்சை சாகுபடி செய்யப்படுகிறது. மற்றும் இந்தியாவில் குஜராத் மாநிலம், கட்ச் பகுதியில் பேரீச்சை மரங்கள் உள்ளன சாகுபடிக்கு ஏற்ற உஷ்ண நிலை, தமிழகத்திலும் உள்ளது. வெப்ப சலனம் மிகுந்த தர்மபுரி மாவட்டத்தில், கிருஷ்ணாபுரம் பகுதியில் விவசாயிகள் பலர், பேரீச்சை சாகுபடியில் வெற்றி பெற்றுள்ளனர் பேரிச்சம் பழத்திற்கு இரத்தத்தை விருத்தி செய்யும் ஆற்றலும், இரத்தத்தை வளப்படுத்தும் இயல்பும் உண்டு.
கீழக்கரையில் பல்வேறு ரகங்களிலான பேரீச்ச
ம் பழங்கள் குவிந்துள்ளதாகவும் நகர் முழுவதும் பல்வேறு கடைகளில் நாளொன்றுக்கு 500கிலோ விற்பனையாவதாக தெரிவிக்கிறார் பேரிச்சம் பழம் மொத்த வியாபாரி காதர்
இது குறித்து கீழக்கரையை சேர்ந்த பேரிச்சம் பழம் மொத்த வியாபாரி காதர் கூறுகையில்,
புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்களின் முக்கிய உணவு பொருளாக பேரீச்சம் திகழ்கிறதுஇஸ்லாமியர்கள் அதிகம் வாழும் கீழக்கரை பகுதியில் டன் கணக்கில் பேரீச்சம் பழங்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. பல் வேறு வகைகள் விற்கப்படுகிறது.கிலோ 120 லிருந்து ரூ2000 வரை தரம் வாரியாக கிடைக்கிறது.பெரும்பாலானவை அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும்.வெளியூர்களிலிருந்து ஏராளமானோர் கிழக்கரை வருகை தந்து வெளிநாட்டு இறக்குமதி செய்யப்பட்ட ருசி மிகுந்த பழங்களை வாங்கி செல்கின்றனர்.
பொதுவாக இப்பகுதியில் ரமலான் மாதத்தில் பேரீச்சம் பழம் விற்பனை அதிகளவில் இருக்கும்.கீழக்கரையில் நாளொன்றுக்கு 500கிலோ விற்பனையாகிறது.ருசி மிகுந்த இப்பழங்கள் ஏழை பணக்காரர் வித்தியாசமின்றி அனைவரும் வாங்கும் வகையிலான விலையில் கிடைக்கிறது.என்றார்
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.