கீழக்கரை தெற்குத்தெரு பகுதியில் கழிவுநீர் குழாய்களில் அடிக்கடி அடைப்புகள் ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடி பள்ளி மாணவர்களுக்கும்,மசூதி மற்றும் பெண்கள் மசூதி ஆகியவற்றிற்கு செல்லும் பொதுமக்களுக்கும் பெரும் இடையூறு ஏற்பட்டு வந்தது.இது குறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் அப்பகுதி கவுன்சிலர் ஆனா மூனாவின் கோரிக்கையின் பேரில் கீழக்கரை நகராட்சி நிர்வாகம் அப்பகுதியில் அடைப்புகளை சரி செய்து புதைக்கப்பட்டுள்ள 4 இன்ச் அளவுள்ள கழிவுநீர் குழாய்களை அகற்றி விட்டு 8 இன்ச் பெரிய கழிவுநீர் குழாய்கள் பதிக்கவும்,கழிவு நீர் தொட்டிகளை சீர் செய்ய கீழக்கரை நகராட்சி சார்பில் தனியார் காண்ட்ராக்டர் மூலம் பணி நடைபெற்றது முடிந்தது.ஆனால் தற்போது புதியதாக அமைக்கப்பட்ட கழிவு நீர் தொட்டிகள் சேதமடைந்ததால் முன்பு போல் கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இது குறித்து தெற்குதெரு ஜமாத் நிர்வாக அலுவலர் பெரிய காக்கா என்ற காதர் கூறியதாவது,
தற்போது மீண்டும் கழிவு நீர் தொட்டிகள் உடைந்தும்,கழிவு நீர் குழாயிலிருந்து கழிவு நீர் வெளியேறி தெற்கு தெரு பள்ளிவாசல் அருகில் ஆறாக ஓடுகிறது.இதனால் இப்பகுதியில் தொழுகைக்கு வருபவர்கள்,பெரியவர்கள்,குழந்தைகள் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.மேலும் நோய் பரவும் வாய்ப்பும் ஏற்படும் எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இது கவுன்சிலர் ஆனா மூனா என்றழைக்கப்படும் முகைதீன் காதர் சாகிப் கூறியதாவது,
ரூ 1லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் இப்பணிகள் நடைபெற்றன ஆனால் தரமற்ற பணியால் கழிவு நீர் தொட்டிகள் இரண்டே நாட்களில் உடைந்தது.உடனே நான் புகார் தெரிவித்தேன் சிலவற்றை காண்ட்ராக்டர் சரி செய்தார் ஆனாலும் பணிகள் தரமில்லாததால் தற்போது கழிவு நீர் சாலையில் ஆறாக ஓடுகிறது.இப்பணிகளை மேற்கொண்ட ஒப்பந்தாரரை இப்பணிகளை சீர் செய்து தர நகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இது குறித்து நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா கூறியதாவது,
இது குறித்து யாரும் தகவல் தரவில்லை தற்போது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.தரமற்ற பணிகள் மேற்கொண்ட காண்ட்ராக்டருக்கு பணிகள் தரமாக இருந்தால் மட்டுமே அதற்கான முழு தொகையும் வழங்கப்படும்.இல்லையெனில் இப்பணி மெற்கொண்டதற்காக அவருக்கான தொகை அளிப்பது நிறுத்தப்படும் என்றார்.
அன்புடன் கீழக்கரை டைம்ஸ்க்கு,
ReplyDeleteஅமானிதத்தை உண்ண ஆசைப்படுபவன், பொதுப் பணத்துல தானும் உண்டு உடல் வளர்த்து தன்னோட வாரிசுக்கும் சேர்க்க நினைப்பவன் மற்றும் பொதுச் சொத்துக்கு ஆசைப்படுபவனுக்கெல்லாம் மறுமையிலே எப்படிப்பட்ட தண்டனை கொடுக்கப்படும் என்பது பற்றிய ஹதீஸ் விளக்கங்களையும் அவ்வப்போது வெளியிட்டீங்கன்னா நன்றாக இருக்கும். பொதுவா துனியா சந்தோசத்தைத் தான் பெரும் சந்தோசமா நிறையப்பேர் நினைத்து வாழ்கிறார்கள்.