சேதமடைந்துள்ள குடிநீர் பைப்லைன்களை சீரமைக்கும் பணியை நகராட்சி தலைவர் நேரில் பார்வையிட்டார்
ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக திருச்சி முக்கொம்பு முத்தரசநல்லூர் பகுதியில் இருந்து ரூ.680 கோடியிலான காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத் தப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இத்திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் குடி நீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை பொய்த்து போனதால் நிலத்தடி நீராதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருச்சி முத்தரசநல்லூர் பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்துக்கான கிணறுகளில் தண்ணீர் இருப்பு பல அடிகளுக்கு கீழே சென்று விட்டது. இதனால் குடிநீர் திட்டத்துக்கு தேவையான தண்ணீரை சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கோடை காலத்தின் தேவையை உணர்ந்து அரசு உத்தரவுப்படி முத்தரசநல்லூர் பகுதியில் புதிதாக குடிநீர் கிணறுகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். ஏற்கனவே நீராதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் புதிதாக கிணறுகள் தோண்டுவதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்துக்கு தேவையான அளவு தண்ணீர் சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர குடிநீர் குழாய் வரும் பாதைகளில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் திருச்சியில் இருந்து அனுப்பப்படும் தண்ணீர் முழுமையாக வந்து சேரவில்லை. இதனால் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வழக்கமாக சப்ளை செய்யப்படும் குடிநீரின் அளவு குறைந்து விட்டது.
குறிப்பாக கீழக்கரையில் காவிரி குடிநீர் திட்டத்துக்கு மாற்றாக ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வந்த சேதுக்கரை குடிநீர் திட்டத்தை மீண்டும் தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி சேதுக்கரை பகுதியில் கீழக்கரை தண்ணீர் தேவையை நிறைவேற்ற ஏற்கனவே அமைக்கப்பட் டுள்ள கிணறுகளில் சக்தி வாய்ந்த மின் மோட்டார்கள் அமைக்க நகரசபை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட பைப் லைன்கள் ஆங்காங்கே சேதமடைந்துள்ளதால் சேதுக்கரையிலிருந்து கீழக்கரையில் உள்ள குடிநீர் தொட்டிக்கு குடி நீர் வந்து சேருவதில் இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது அவற்றை சீரமைத்து நடவடிக்கை எடுக்க கீழக்கரை நகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டு நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா உடைப்பு ஏறபட்டுள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்டார்
இது குறித்து நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா கூறியதாவது,
ஏற்கெனவே மாலக்குண்டுவிலிருந்து கீழக்கரைக்கு குடிநீர் சப்ளை சேய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .தற்போது சேதுக்கரயிலிருந்து கீழக்கரைக்கு குடிநீர் கிடைக்கும் வண்ணம் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. சேதுக்கரையிலிருந்து கீழக்கரைக்கு அமைக்கப்பட்டுள்ளது குடி நீர் பைப்லைன்கள் பல இடங்களில் சேதமடைந்துள்ளதால் அவை சரி செய்யப்பபட்டு.அனைத்து பணிகளும் சீரமைக்கப்பட்டு சேதுக்கரையில் கீழக்கரை நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் கிணறுகளிலிருந்து விரைவில் கீழக்கரைக்கு குடிநீர் சப்ளை தொடங்கப்படும்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.