Monday, May 20, 2013

கீழ‌க்க‌ரையில் ப‌ழைய‌ சேத‌ம‌டைந்த‌ மின்க‌ம்ப‌ங்க‌ள்!ஆப‌த்து ஏற்ப‌டும் முன் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ பொதும‌க்க‌ள் வேண்டுகோள்!


முற்றிலும் அரிக்கப்பட்டு விழுந்து விடும் நிலையில் உள்ள மின்கம்பம்.

கீழ‌க்க‌ரையில் மின்சார‌த்துறைக்கு ரூ 5 கோடி ஒதுக்க‌ப்ப‌ட்டு ப‌ல்வேறு ப‌ணிக‌ள் மேற்கொள்ள‌ உள்ள‌தாக‌ செய்திக‌ள் வெளியாயின‌.ஆனால் இன்னும் ப‌ல‌ இட‌ங்க‌ளில் ப‌ழ‌மையான‌ மின் க‌ம்ப‌ங்க‌ள் மாற்ற‌ப்ப‌டாம‌ல் சேத‌ம‌டைந்த‌ நிலையில் உள்ள‌ன‌.இத‌னால் பெரும் ஆப‌த்து ஏற்ப‌டும் முன் மின்சார‌த்துறை ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டுமென‌ பொதும‌க்க‌ள் கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்!

இந்நிலையில் கீழக்கரை மேலத்தெரு மணியார்வெட்டையிலிருந்து பன்னாட்டு தெருவிற்கு செல்லும் வழியில் இரும்பினால் ஆன மின் கம்பம் ஒன்று உள்ளது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்னர் வைக்கப்பட்ட இந்த இரும்பு கம்பம் தற்போது அடிப்பகுதியில் முழுவதும் அரிக்கப்பட்டு, எப்போதும் விழுந்து விடும் நிலையில் உள்ளது. அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆபத்தை அறிந்து கொள்ளாமல் இந்த மின் கம்பத்தின் அருகே குழந்தைகள் விளையாடுகின்றன. மக்கள் நடமாட் டம் அதிகம் உள்ள அந்த தெருவில் மின்கம்பம் சாய்ந்து விழுந்தால் பெரிய விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

சேதமடைந்த இந்த மின் கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு, அப்பகுதியை சேர்ந்த பொதுமக் கள் கீழக்கரை மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் மின் வாரிய அதிகாரிகள் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலத்தெருவை சேர்ந்த முகம்மது கூறுகையில், இந்த இரும்பு மின்கம்பம் 40 ஆண்டுகளுக்கு முன்னர் வைக்கப்பட்டது. இந்த கம்பத்தின் அடிப்பகுதி முற்றிலும் அரிக்கப்பட்டுள்ளதால் கம்பம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. மழை காலங்களில் இந்த கம்பத்தில் கை வைத்தால் ஷாக் அடிக்கிறது. இந்த கம்பத்தை மாற்ற மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றார்.

இது போன்று கீழ‌க்க‌ரையில் ப‌ல்வேறு இட‌ங்க‌ளிலுள்ள‌ பழைய‌ மின்க‌ம்ப‌ங்க‌ளை மாற்ற‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என‌ கோரிக்கை எழுந்துள்ள‌து.
 

1 comment:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்May 20, 2013 at 8:47 PM

    கீழக்கரையில் பழுதடைந்த பழைய மின் கம்பங்களை, ஒட்டு போட்ட மின் கம்பிகளை மாற்ற, சில காலத்திற்கு முன் ஐந்து கோடி ரூபாய் அரசு தரப்பிலிருந்து ஒதுக்கப்பட்டதாக அறிவிப்பு ஒன்று வந்ததே அது என்ன வாயிற்று?

    பணி முடிந்ததாக பில் போட்டு ஆட்டையை போட்டு விட்டார்களா?

    பொது நல அமைப்புகள் இது விஷயத்தில் சற்று கவன்ம் செலுத்த வேண்டுகிறோம்.

    எப்படி அரசுகள் செய்யும் தவறுகளுக்கு உச்ச மற்றும் உயர் நீதி மன்றங்கள் தலையில் கொட்டுகிறதோ அது போல மக்கள் நலம் காக்கும் பொது நல அமைப்புகள் செயல் பட விரும்புகிறோம்.

    அவர்கள் செய்யும் முயற்சியின் விளைவுகளை மக்களுக்கு குறிப்பாக கீழக்கரை டைம்ஸ், கீழை இளையவன் வளைத் தளங்கள் மூலமாக தெரிவிக்கும் பட்சத்தில் சர்வ தேச அளவில் வியாபித்திருக்கும் கீழை நகர் வாசிகள் ஊர் நட்பபை அறிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.