Monday, May 13, 2013

கீழ‌க்க‌ரை முஸ்லீம் ப‌ஜார் ப‌குதியில் குப்பைக‌ளை அக‌ற்ற‌ கோரிக்கை!




கீழக்கரையில் முஸ்லீம் பஜார் அருகே குவிந்து கிடக்கும் குப்பைகளால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை அகற்ற உடனடியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 குப்பைகளை அகற்ற நகராட்சியில் தற்போது 24 துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
முஸ்லீம் பஜார் பகுதியை சேர்ந்த அகமது அப்துல் காதர் கூறுகையில்,
கடந்த ஒரு வாரமாக குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால், கொசு தொல்லை அதிகரித்துள்ளது. இரவில் தூங்க முடியாமல் தவித்து வருகிறோம். வழக்கமாக எங்கள் பகுதியில் 3, 4 நாட்களுக்கு ஒருமுறைதான் குப்பைகளை அகற்றுகின்றனர். இது குறித்து நகராட்சியில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. குப்பைகளை தினமும் அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


இது குறித்து ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் க‌த‌ரியாவிட‌ம் கேட்ட‌ போது,

ஒரு வார‌மாக‌ அக‌ற்றாம‌ல் இருக்க‌ வாய்ப்பில்லை.ஒவ்வொரு நாளும் குப்பைக‌ள் அக‌ற்ற‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.முத‌ல் நாள் இர‌வில் குப்பைக‌ள் ஒரு இட‌த்தில் சேரும் போது ம‌று நாள் உட‌ன‌டியாக‌ அக‌ற்ற‌ப்ப‌டுகிற‌து.இது போன்று இருக்கும் ப‌ட்ச‌த்தில் இது குறித்து உட‌ன‌டி எடுக்க‌ப்ப‌டும் மேலும் த‌ற்போது கூடுத‌ல் துப்புர‌வு ப‌ணியாள‌ர்க‌ள் நிய‌மிக்க‌ப்ப‌ட்டு உள்ளார்க‌ள்.என‌வே துப்புர‌வு ப‌ணிக‌ள் துரித‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.குறைக‌ள் இருந்தால் சுட்டி காட்டுங்க‌ள் உட‌ன‌டியாக‌ ச‌ரி செய்ய‌ ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் த‌யாராக‌ உள்ள‌து. என்றார்

1 comment:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்May 13, 2013 at 6:58 PM

    நகரின் முதல் குடிமகளின் பதில் மிகுந்த வேதனை அளிக்கிறது. படத்தில் உள்ள நபர் குப்பைக்கு அடுத்துள்ள வீட்டின் உரிமையாளர். அப்போ அவர் புனைநது உரைக்கிறாரா? மேலும் குப்பைக்கு எதிரில் தான் துணை சேர்மனின் அலுவலகம் உள்ளது. அவர்களும் வீட்டு உரிமையாளரின் கூற்றை மறுக்கிறார்களா? என்னதான் நடக்கிறது?

    இப்போதும் கூட அதாவது புதிய துப்பரவு பணியாளர்கள் நியமித்த பிறகும் சந்துக்களில் பெருக்குவதில்லை. வாரத்தில் ஒரு நாள் கூட சந்துகளில் பெருக்க நடவடிக்கை எடுக்க கூடாதா? இதற்கு என்ன உடனடி பதில் வைத்திருகிறார்களோ ?

    சந்துகளில் உள்ளவர்களும் நீங்கல் கேட்கிற வரியை செம்மையாகத் தானே கட்டுகிறார்கள்.அப்ப்டி இருக்கையில்..... ஏன் இந்த அவல நிலை?

    மற்ற பகுதிகளில் காவேரி கூட்டு குடி தண்ணீர்வினியோகம் ஏதோ பெயரளவில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் கீழக்கரையில்...? ஆனால் தண்ணீர் வரியை மட்டும் வீடு தேடி வந்து வசூலிக்கிறீர்கள்? இது என்ன நியாயம்?

    வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.