கீழக்கரை நகராட்சியில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.சிறுவர் சிறுமியர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் அரசு சார்பில் பூங்கா கீழக்கரையில் இல்லை .கீழக்கரை கடற்கரையில் பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்லாண்டுகளாக இருந்து வருகிறது.
புதிய ஜெட்டி பாலம் அமைக்கப்பட்ட பின் மீன் துறைக்கு சொந்தமான இடம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.இதனால் மாலை நேரத்தில் கடலின் அழகை ரசிக்க ஏராளமான மக்கள் திரண்டு வருகின்றனர். மக்கள் அமர்வதற்கு இருக்கைகள் இல்லாததால் பாதுகாப்பற்ற நிலையில் (ஜெட்டி)கடல் பாலத்தில் அமர்ந்து வருகின்றனர்.
பாலம் அமைந்துள்ள கடற்கரை பகுதியில் காலி இடம் உள்ளது அந்த இடத்தை கையகப்படுத்தி சிறுவர்களுக்கான பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து சமூக நல அமைப்புகளும் கோரிக்கை விடுத்தனர் நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா விரைவில் பூங்கா அமைப்பற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்து சென்னையில் அமைச்சரை கோகுல் இந்திராவை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
அரசு சார்பில் இதறகான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இதற்கான இடமும் தேர்வு செய்யப்படும் என்றும் அருகில் உள்ள இடத்தை பயன்படுத்தி கொள்ள நகராட்சி சார்பில் மீன் வளத்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக என்பதாக செய்திகள் வெளியாயின.ஆனால் மாதங்கள் கடந்து விட்டது இதற்கான பணிகள் எதுவும் துவங்கப்படவில்லை.எனவே துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிகை விடுத்துள்ளனர்.
இது குறித்து கீழக்கரையை சேர்ந்த நெய்னார் கூறுகையில்,
நகராட்சி நிர்வாகம் நடவடிக்கைகளை துரிதப்படுத்தி பூங்கா அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் கடற்கரையோரம் காலி இடத்தில் பொதுமக்கள் அமரும் வகையில் சேர்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யப் கோரிக்கை விடுக்கப்பட்டது .தற்காகலிகமாக இதை நகராட்சி நிர்வாகம் செய்து தர வேண்டும்.இத்திட்டம் செயல்படுத்தபட்டு பூங்கா அமையுமானால் தற்போதைய நகராட்சி தலைவரின் சாதனை நிகழ்வாக மக்கள் மனதில் நிலைபெறும் என்றார்.
இது குறித்து நகராட்சி தலைவர் ராவியத்து கதரியாவிடம் கேட்ட போது ,
பூங்கா அமைப்பதற்கு தேவையான இடம் கையகப்படுத்தப்பட வேண்டும்.தொடர்ந்து இதற்கான முயற்சிகள் மேற்கொள்ள பட்டு வருகிறது.தனியாரின் இடமும் அப்பகுதியில் உள்ளதால் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.இடம் கையகபடுத்தும் பணி நிறைவடைந்தவும் கடற்கரையோரம் பூங்கா அமைப்பதற்கு தேவையான பணிகள் துவங்கம் என்றார்.
பூங்கா அமைக்கும் பணி தொடங்கும் வரையில் நகராட்சியால் அந்த இடங்களை மக்கள் உட்காருவதற்கு ஏதுவாக காட்டு செடிகளை அகற்றி , தினமும் துப்பரவு செய்து வசதிகளை செய்து கொடுத்தால் மக்கள் வாழ்த்துவார்கள்.
ReplyDelete