கீழக்கரை வடக்குத்தெரு சமூக நல அமைப்பான நாஸா சார்பில் அல்மத்ரஸத்துல் முகம்மதியா நடத்திய இஸ்லாமியா பயிற்சி முகாம் நிறைவு விழா முகைதீனியா மெட்ரிக் பள்ளி வளாகத்த்தில் நடைபெற்றது.
வடக்குத்தெரு ஜமாத் துணை தலைவர் அகமது மிர்ஷா தலைமை வகித்தார்.செயலாளர் முகைதீன் இப்ராகிம்,உதவி செயலாளர் சகாப்தீன்,கல்விக்குழு தலைவர் மவுலா முகைதீன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
அகமது ஹீசைன் ஆசிப் வரவேற்புரை நிகழ்த்தினார்.இதில் 5 வயது முதல் 8 வரையும் ,9 வயது முதல் 13 வரையும்,14 வயது முதல் 19வரை ஆக மூன்று பிரிவாக மாணவர்களுக்கு கோடை கால இஸ்லாமிய பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இதில் திருக்குரான் மனனம்,தொழுகை பயிற்சி,ஹதீஸ்,அடிப்படை சட்டங்கள்,போன்ற பயிற்சிகள் நடைபெற்றன.
நிறைவு விழாவில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.பயிற்சி முகாமில் இமாம்கள் முஹம்மது தவ்ஹீத்,அகரம்,நஃரான்,ஆசிப்,ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சியளித்தனர்.இதில் வடக்குத்தெரு ஜமாத்தார்கள் உள்பட ஏரளமான பொது மக்களும் கல்ந்து கொண்டனர்.
கீழக்கரை சமுக நல அமைப்பான நாஸா சார்பில் கோடைகால பயிற்சி முகாம்!ஏராளமான மாணவர்கள் பயன் பெற்றனர்!.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.