பைல் (பழைய)படம்
கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழக மாதாந்திர கூட்டம் நகர் அலுவலகத்தில் தலைவர் தமீமுதீன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு துணை தலைவர் மாணிக்கம் ,செயலாளர் முகைதீன் இப்ராகிம்,இணை செயலாளர் செய்யது சாஹீல் ஹமீது,பொருளாளர் முகம்மது சாலிஹ் ஹுசைன்,செய்தி தொடர்பாளர் ஜெகதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன.
1,அண்டை மாநிலமான கேரளா ஆந்திரா உள்பட 17 மாநிலங்களில் நடைமுறையில் இருக்கும் லோக் ஆயுக்தா என்ற ஊழலுக்கு எதிராக விசாரணை செய்யும் ஒரு மாநில நீதியமைப்பை தமிழ்நாட்டிலும் விரைவில் அமல்படுத்த சட்டம் கொண்டு வர தமிழக முதல்வர் ஆவண செய்ய வேண்டும் என்றும்,
2,இலங்கையில் தனி ஈழம் அமைய ஈழத்தமிழர்கள் மற்றும் இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்த தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்கிற தனி தீர்மாணத்தை இந்திய அரசு ஐநாவில் மீண்டும் வலியுறுத்த வேண்டும் என்றும்,
3,கீழக்கரை நகராட்சியின் 2011 2012 காலகட்டத்தில் நடைபெற்ற அனைத்து திட்ட பணிகளிலும் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதால் பணிகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும்
4,கீழக்கரை காவல்நிலையத்துக்கு கூடுதல் காவலர் நியமிக்க வேண்டும் என்பதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் செயற்க்குழு உறுப்பினர்கள் முசம்மில் ஹுசைன்,சீனி முகம்மது சேட்,அபு பைசல்,பவுசுல் அமீன் உள்பட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.