தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக கீழக்கரை நகராட்சி பகுதியில் லாரி கள் மூலம் குடிநீர் வினி யோகம் செய்யப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக திருச்சி முக்கொம்பு முத்தரசநல்லூர் பகுதியில் இருந்து ரூ.680 கோடியிலான காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத் தப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இத் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் குடி நீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை பொய்த்து போன தால் நிலத்தடி நீராதாரம் வெகு வாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருச்சி முத்தரசநல்லூர் பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத் துக்கான கிணறுகளில் தண் ணீர் இருப்பு பல அடிகளுக்கு கீழே சென்று விட்டது. இதனால் குடிநீர் திட்டத்துக்கு தேவையான தண்ணீரை சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கோடை காலத்தின் தேவையை உணர்ந்து அரசு உத்தரவுப்படி முத்தரசநல் லூர் பகுதியில் புதிதாக குடி நீர் கிணறுகள் அமைக்க அதி காரிகள் நடவடிக்கை மேற் கொண்டனர். ஏற்கனவே நீராதாரம் பாதிக்கப்பட்டுள் ளதால் புதிதாக கிணறுகள் தோண்டுவதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். இதன் காரண மாக ராமநாதபுரம் மாவட் டத்துக்கு தேவையான அளவு தண்ணீர் சப்ளை செய்ய முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர குடிநீர் குழாய் வரும் பாதைகளில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் திருச்சியில் இருந்து அனுப்பப் படும் தண்ணீர் முழுமையாக வந்து சேரவில்லை. இதனால் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வழக்கமாக சப்ளை செய்யப்படும் குடிநீ ரின் அளவு குறைந்து விட் டது.
குறிப்பாக கீழக்கரையில் காவிரி குடிநீர் திட்டத்துக்கு மாற்றாக ஏற்கனவே செயல்ப டுத்தப்பட்டு வந்த சேதுக்கரை குடிநீர் திட்டத்தை மீண்டும் தொடங்க அரசு உத்தரவிட் டுள்ளது. இதன்படி சேதுக் கரை பகுதியில் கீழக் கரை தண் ணீர் தேவையை நிறைவேற்ற ஏற்கனவே அமைக்கப்பட் டுள்ள 8 கிணறுகளில் சக்தி வாய்ந்த மின் மோட்டார்கள் அமைக்க நகரசபை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த பணிகள் முடிவடைந்து தண்ணீர் சப்ளை செய்யப்ப டும் வரை தற்காலிக ஏற்பாடாக லாரிகள் மூலம் தண் ணீர் வினியோகம் செய்ய நகரசபை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி நாளொன்றுக்கு 72 ஆயிரம் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யும் வகையில் 2 லாரி கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. லாரிகள் செல்ல முடியாத பகு திகளில் டிராக்டர்கள் மூலம் தண்ணீர் சப்ளை செய்ய ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி லாரிகளில் குடி நீர் சப்ளை செய்யும் பணி களை புதுகிழக்கு தெரு பகுதி யில் நகரசபை தலைவர் ராவியத்துல் கதரியா தொடங்கி வைத்தார். இதில் துணை தலைவர் காஜா மைதீன், ஆணையாளர் முகமது மைதீன் உள்பட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கோடைகாலம் முடியும் வரை 45 நாட்களுக்கு கீழக்கரை பகுதி முழுவதும் சீரான குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
குடிநீர் வினியோகம் இல்லாத காலத்திற்கு நகராட்சி நிர்வாகம் தண்ணீர் வரியை வஜா செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு முன் உதாரணங்கள் உண்டு.
ReplyDeletepuriyavillaiye enna solla varinga
ReplyDelete