+2 தேர்வு முடிவில் இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவர் அப்துல் கரீம் அஹ்ஷன் 1146/1200 ,மாணவி முஹம்மது தவ்லத் கதரியா ஆகியோர் 1146/1200 எடுத்து பள்ளியில் முதலிடமும் கீழக்கரை நகரில் இரண்டாமிடமும் பிடித்தனர். முஹம்மது அபியா 1126/1200 எடுத்து பள்ளியில் இரண்டாம் இடம் பெற்றார் .ஹதிஜத்துல் அஃப்ரோஸ் 1123/1200 எடுத்து பள்ளியில் 3ம் இடம் பெற்றார்.
9பேர் 1000த்திற்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்றனர்.
அனைவரையும் பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே முகைதீன் இப்ராகிம்,முதல்வர் மேபல் ஜஸ்டிஸ் மற்றும் ஆசிரியர்கள் ,மாணவ,மாணவியர் பாராட்டு தெரிவித்தனர்.
இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம் எம் கே முகைதீன் இப்ராஹிம் கூறியதாவது,
+2 தேர்வு எழுதி முடிவுகளை பெற்ற அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் வாழ்த்துக்கள்.
கீழக்கரையில் ஏராளமான மாணவிகள் 1000 மதிபெண்களை பெற்றுள்ளனர் மேலும் அதிக மதிப்பெண்களாக 1155 ,1146 என பெற்று சாதனை படைத்துள்ளனர்.தமிழகத்தின் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கும் இவர்களுக்கும் மிக குறைந்த அளவே மதிபெண்கள் வித்தியாசம் வருங்காலங்களில் தமிழகத்திலேயே அதிக மதிப்பெண் பெற்ற மாணவியர் கீழக்கரையிலேயே உருவாகுவார்கள்.
ஆனால் கீழக்கரையில் மிக வருத்ததுக்குறிய நிகழ்வு என்னவென்றால் பெரும்பாலானோர் இவ்வளவு மதிப்பெண்கள் பெற்ற மாணவியரை பொருளாதார சூழ்நிலை நன்றாக இருந்தும் உயர் கல்வி கற்க அனுப்புவதில்லை பள்ளி படிப்புடன் கல்வியை நிறுத்தி விடுகின்றனர்.சென்ற ஆண்டு எங்கள் பள்ளி மாணவி கீழக்கரையிலேயே அதிக மதிபெண்கள் எடுத்தார் ஆனால் அவரின் குடும்பத்தார் அவரை மேல் படிப்பு தொடர அனுமதிக்கவில்லை.
இது அக்குடும்பத்தாரின் உரிமை என்றாலும் சமுதாயத்திற்க்கு பயன் பட வேண்டிய மாணவியின் கல்வி பாதியிலேயே நின்று விட்டதே என்ற மன வருத்தம் எங்களுக்கு ஏற்பட்டது.கல்வியில் பின் தங்கி இருக்கும் சமூகத்தில் சிறந்த மாணவியின் படிப்பு பாதியிலேயே நிறைவு பெறுவது எனபது மிகவும் வேதனையளிக்கும் நிகழ்வு
மேல் படிப்புக்கு கல்லூரி செல்வோமா? என்ற நிச்சயம் இல்லாத நிலையில் கீழக்கரையில் மாணவியர் இவ்வளவு மதிப்பெண்களை எடுக்கும் நிலையில் இவர்களுக்கு உயர் கல்விக்கான உத்தரவாதத்தையும்,ஊக்கத்தையும் அளிப்போமானால் கீழக்கரை மாணவிகள் கல்வியில் பெரும் சாதனை படைப்பார்கள் என்பது நிச்சயம்.
எனவே கீழக்கரையை சேர்ந்த பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளி படிப்புடன் நிறுத்திவிடாமல் உயர் கல்வி பெற அனுமதியுங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
good news that islamiah matriculation shows the way
ReplyDeletethat how to run a school perfectly
congratiulations
ஊர் மக்களாகிய நாங்களும் கீழக்கரை டைம்ஸுடன் இணைந்து அந்த மாணவச் செல்வங்கள் அனைவரையும் உவகை பொங்க வாழ்த்துகிறோம்.அவர்களை உருவாக்கிய ஆசிரிய பெருந்தகைகளையும், கல்வி நிர்வாகத்தையும் பாராட்டுகிறோம்.
ReplyDeleteLet the parents encourage and support all the students for their higher studies ! Let us also support those students with high academic and underpriviledged financially for their higher studies.
ReplyDelete