கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பி தெரிவித்திருப்பதாவது,
கல்லூரி மாணவர்கள் நிலைகாந்தத்திலிருந்து இயந்திர ஆற்றலை உருவாக்கி அதை ஜெனரேட்டருடன் இணைத்து அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர்.
நிலைகாந்த ஈர்ப்பு உள்ளிட்டவைகளை பயன்படுத்தி இந்த கருவி இயங்குகிறது.இக்கருவி இயங்குவதற்கு எரிபொருள் தேவையில்லை மேலும் பராமரிப்பு செலவும் இல்லை
இதனை பெரிய அளவில் தயார் செய்தால் மின்சார பற்றாக்குறையை தவிர்க்கலாம்.இந்த நவீன கருவியை உருவக்கிய மாணவர்கள் உபேஸ்,பாஸி,முஹைதீன்,சேக் ஒலி,அஹமது ஜாவித் ஆகியோரை கல்லூரி இயக்குநர் ஹபீப் முஹம்மது சதக்கத்துல்லா,கல்லூரி முதல்வர் முஹம்மது ஜஹாபர்,மின்னியல் துறை பேராசிரியர் சுரேஷ் குமார் மற்றும் கல்லூரி அலுவலர்கள் பாராட்டினார்கள்.
வாழ்த்துக்கள்.....
ReplyDeleteஇன்றைய இக்கட்டான காலக் கட்டத்தில் குறிப்பாக மின் தேவையை பொருத்த மட்டில் மிகவும் எழுச்சியான கண்டுபிடிப்புகளான குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்கும் கருவி, குறைந்த காற்றழுத்ததில் இயங்கும் காற்றாலை இயந்திரம் போன்ற கண்டுபிடிப்புகளில் சாதனை படைக்கும் நமதூர் கீழக்கரை சதக் தொழில் கல்வி கல்லூரிகள் குழுமத்திற்கு உளமார்ந்த பாராட்டுகள்.
ReplyDeleteஇவை ஆக்கப்பூர்வமான செயல் வடிவம் கண்டு நாட்டு மக்களுக்கு பயன் தர மனதார அனைவரும் வல்ல ரஹ்மானிடத்தில் பிரார்த்திப்போமாக. ஆமீன்.