கீழக்கரையில் வழிப்பறியில் ஈடுபட்டதாக வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து தங்கம், வெள்ளி நகைகள் உள்ளிட்ட பொருட்களை மீட்டனர்.
கீழக்கரை வடக்கு தெரு பகுதியில் வசிப்பவர் நகுலன். இவரது மகன் தீபன்(30). மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்றார். விஏஓ அலுவலகம் அருகே சென்றபோது ஏர்வாடி தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்த ஜாபர்அலி மகன் மக்ரிப்தீன் தீபனை வழிமறித்து அவரிடம் ரூ.500, செல்போன், கைக்கடிகாரம் ஆகியவற்றை வழிப்பறி செய்ததாக போலீசில் தீபன் புகார் கொடுத்தார்.
இதனடிப்படையில் கீழக்கரை போலீசார் மக்ரிப்தீனை கைது செய்தனர். விசாரணையில் கீழக்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திருட்டு, வழிப்பறியில் அவர் ஈடுபட்டது தெரியவந்தது. இதன் பேரில் மக்ரிப்தீனை(32) கைது செய்து அவரிடம் இருந்து 3 பவுன் நகை, 5 ஜோடி வெள்ளி கொலுசு, 3 வெள்ளிக்கொடி, ரூ.37ஆயிரத்தை மீட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.