கூட்டத்தில் கீழக்கரை நகராட்சி அலுவலக மாடியில்,சுனாமி எச்சரிக்கை ஒலிப்பான் அமைப்பது, திடக்கழிவு ள்பணிக்கு பணியாளர்கள் அமர்த்தி குப்பைகள் சேகரிப்பது, தொழில் உரிமத்திற்கான கட்டணம் உட்பட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் நடந்த விவாதம்;
21வது வார்டு கவுன்சிலர் ஜெயப்பிரகாஷ்:

பிற நகராட்சிகளில் மூன்று ஆவணங்கள் பெறப்பட்டு பிறப்பு சான்றிதழ் வழங்கி வருகின்றனர்.இங்கு விதிகளுக்கு முரணாக எட்டு ஆவணங்கள் கேட்கப்படுவதால் மக்கள் அவதியடைகின்றனர்.இதனால் சான்றிழ் பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு மேலாகிறது .கீழக்கரை நகராட்சிக்கு மட்டும் தனி சட்டமா? பாஸ்போர்ட் எடுப்பதற்கு கூட இத்தனை ஆவணங்கள் கேட்கபடவில்லை.

கவுன்சிலர் ரபியுதீன் : இந்த 8 ஆவணங்களை பெறுவதற்கு பொது மக்கள் ரூ 2 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்கின்றனர்.

தலைவர் ராவியத்துல் கதரியா ::மக்கள் சிரமமில்லாமல் சான்றிதழ் பெற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்

சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி :நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
5வது வார்டு கவுன்சிலர் சாகுல் ஹமீது :
பொது சுகாதார உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் தளவாடப் பொருள்களின் மதிப்பீடு தொகை ரூ 2 லட்சம் என போட்டுள்ளீர்கள் இதே பொருள்கள் சப்ளை செய்யும் கடை ஒன்றில் கொட்டேஷன் வாங்கியுள்ளேன் மொத்தம் இத்தளவாடத்திற்கு ரூ42 ஆயிரத்து 370தான் தந்துள்ளார்கள் எனவே மக்கள் பணம் வீணடிக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் உள்ளது.

கமிஷனர் முஹம்மது முகைதீன் : மதிப்பீடு தான் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசால் அங்கரீக்கப்பட்ட மையத்தில் தான் பொருட்கள் வாங்கப்படும்.

கவுன்சிலர் சாஹீல் ஹமீது : உத்தேச மதிப்பு என்றுதான் சொல்கிறீர்கள் ஆனால் அடுத்த கூட்டத்தில் வைக்கு தீர்மானத்தில் எந்த உத்தேச மதிப்பும் குறைந்தபாடில்லை அப்படியே அமல்படுத்தி விடுகிறீர்கள்.

16வது வார்டு கவுன்சிலர் முகம்மது ஜரினா:
மாதம் மாதம் நடைபெறும் கூட்டத்தில் எனது வார்டு கழிவு நீர் பிரச்சனை குறித்து தெரிவிக்கிறேன் ஆனால் தலைவர் தீர்மானம் போடப்பட்டுள்ளது என்று மட்டும் சொல்கிறார் அதோடு சரி இப்போது என்ன சொல்ல போகிறார்



வீடுகளை தேடி அலுவலர்கள் வரி வசூலுக்கு செல்கின்றனர். ஆபீஸைதேடி வரி செலுத்த வந்தும் வரி வாங்குவதற்கு மறுக்கின்றனர். மேலும் பல வருடங்களாக வரி செலுத்தி வருபவர்களிடம் வரி பதிவு இல்லை புதிய வரி போட வேண்டும் என்கின்றனர் மெலும் நகரில் வெறி நாய் தொல்லை அதிகரித்துள்ளது.

தலைவர் ராவியத்துல் கதரியா :
இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்

நாய்கள் பிடிப்பதற்கான உத்தரவு வழங்கப்பட்டு விட்டது.காப்பகமும் கட்டப்பட்டு தயாராக உள்ளது.சில தவிர்க்க முடியாத காரணங்களால் பணி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இந்த வாரத்திற்குள் நாய் பிடிக்கப்பட்டு கருத்தடை ஊசி போடப்படும்.
பல்லாக்கு ஒலியுல்லா தர்ஹா பகுதி சாலை பகுதியில் பைப் புதைத்து விட்டு ரோடு போடாலம் என்று வலியுறுத்தியும் கேட்காமல் ஒரு வாரத்திற்கு முன்புதான் புதிய ரோடு அமைத்தீர்கள் தற்போது அதே பகுதியில் பைப் புதைக்க தீர்மானம் போட்டுள்ளீர்கள் இதனால் புதிய ரோடு சேதமடையும் இதே போன்றுதான் சொக்கநாதர் கோயில் பகுதி ரோட்டை போட்டு விட்டு பைப் போட ரோட்டை உடைத்தீர்கள் இதனால் அந்த சாலை தற்போது குண்டும் குழியுமாக உள்ளது.அதே போன்றுதான் இந்த ரோடும் சேதமடையும்.

தலைவர் ராவியத்துல் கதரியா :: ரோட்டை சேதமடைய செய்யாமல் ரோட்டோரமாக பைப் புதைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.