கீழக்கரை நகர்மன்ற கூட்டம் தலைவர் ராவியத்துல் கதரியா தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் ஹாஜா முகைதீன்,நகராட்சி ஆணையாளர் முகம்மது முகைதீன்,பொறியாளர் மதிவானன் மற்றும் அலுவலர்கள் முன்னிலை வகித்தனர்.
கவுன்சிலர் ஜெயபிரகாஷ்:
எனது வார்டில் கழிவு நீர் பம்பிங் செய்ய பயன்படுத்தப்படும் ஜெனரேட்டர் பழுதாகி விட்டது.எவ்வித நடவடிக்கையும் இல்லை.இதனால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.சுகாதார ஆய்வாளரிடம் புகார் செய்தால் பொதுமக்கள்தான் புகார் செய்ய வேண்டும் என பொறுப்பற்ற முறையில் பதில் கூறுகிறார்.
தலைவர் ராவியத்துல் கதரியா : இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்
கவுன்சிலர் சாஹுல் ஹமீது : ரூபாய் 65 லட்சம் செலவில் குடிநீர் வாகனம்,கழிவுநீர் உறிஞ்சும் வாகனம்,டிம்பர் பிளாசா வாகனம் வாங்கினீர்களே எதற்கு காட்சி பொருளாக நிறுத்துவதற்காகவா?இது போன்று மோட்டர் பழுதாகும் நேரத்தில் கழிவு நீர் உறிஞ்சும் வாகனத்தை பயன்படுத்தலாமே ?
தலைவர் ராவியத்துல் கதரியா : இன்னும் டிரைவர் நியமிக்கவில்லை
துணை தலைவர்: ஏன் சுகாதார மேஸ்திரியை குடிதண்ணீர் வண்டிக்கு டிரைவராக பயன்படுத்துவது போன்று இந்த வாகனத்திற்கும் பயன்படுத்தலாமே?
கவுன்சிலர் முகைதீன் இபுராகீம்: கீழக்கரையில் லாரிகள் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரில் அதிகளவில் முறைகேடு நடந்துள்ளது.எனவே அந்த டென்டரை ரத்து செய்யப்பட வேண்டும்.
கவுன்சிலர் ரபியுதீன்: பல பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு பணி உத்தரவு கொடுத்தும் பணிகள் தொடங்கப்படாதது ஏன்?
கவுன்சிலர் அஜ்மல்: நகரசபை சார்பில் லாரிகளில் விநியோகிக்கப்படும் குடிநீர் ஹோட்டல்,டீக்கடை போன்றவற்றிற்கு முறைகேடாக விநியோகம் செய்யப்படுகிறது. பொதுமக்களுக்கு குடிநீர் கிடைப்பதில்லை.தற்போது விலைக்கு விற்பவர்களும் இலவச தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது என்று விற்க வருவதில்லை இதனால் பொதுமக்கள் குடிநீர் பெறும் சிரமப்படுகிறார்கள்.நாளொன்றுக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.
கமிஷனர் : 48 ஆயிரம் லிட்டர்.
கவுன்சிலர் முகைதீன் இப்ராஹிம்: நாளொன்றுக்கு 72 ஆயிரம் லிட்டர் வீதம் 60 நாட்களுக்கு ரூ9 லட்சத்து 50 ஆயிரத்திற்கு டெண்டர் வைத்து விட்டு தற்போது 48 ஆயிரம் லிட்டர் தான் சப்ளை செய்கிறோம் என்று கூறுகிறீர்கள் இதிலிருந்து தெரிகிறது இதில் முறைகேடு நடைபெறுகிறது .
கவுசிலர் ஜெயபிரகாஷ்:
கீழக்கரை முழுவதும் தற்போது மீண்டும் டெங்கு பரவுகிறது.10வது வார்டில் ஒரு கல்லூரி மாணவி உயிரழ்ந்துள்ளார்.கொசு மருந்து அடிப்பதில்லை சுகாதார ஆய்வாளரிடம் கேட்டல் உங்கள் விருப்பதிற்கு அடிக்க முடியாது என்று கூறுகிறார்.கொசு மருந்து வாங்கியதிலும் ஊழல் நடைபெற்றுள்ளது .இது குறித்து கமிஷனர் விசாரிக்க வேண்டும்.காட்சி பொருளாக இருக்கும் கொசுமருந்து தெள்ப்பாணை பயன்படுத்த வேண்டும்.
கவுன்சிலர் ஹாஜா நஜ்முதீன் : நகர சபையில் தீர்மானம் நிறைவேற்றி டென்டர் விடப்பட்டு பணிஆனை வழங்கப்பட்ட பல பணிகள் நடைபெறவில்லை. அதனை உடனடியாக தொடங்க வேண்டும்.
கவுன்சிலர் ஜரினா பேகம்: எனது வார்டு பகுதியில் கொசு தொல்லை அதிகரித்து நோய்கள் பரவி வருகிறது. கடந்த 4மாதங்களாக கொசு மருந்து அடிக்க வரவில்லை.
கமிஷனர்: இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கவுன்சிலர் சுரேஷ்: பேருந்து நிலையத்தில் மின்கட்டண அலுவக கட்டிட பணிகள் நிறைவடைந்து ஒரு ஆண்டு ஆகி விட்டது.இது வரை செயல்படுத்தது ஏன்?
கமிஷனர்: மின்கட்டணம் வசூல்மையம் செயல்படுத்துவதில் மின்வாரியத்தினர் காலம் தாழ்த்தி வருகின்றனர். இது தொடர்பாக வலியுறுத்தி செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கூட்டத்தில்,கீழக்கரையில் 9லட்சத்து 50ஆயிரம் மதிப்பில் லாரி,டிராக்டர் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. மலேரியா தடுப்புமையம் பின்புறம் உள்ள கட்டிடத்தை மராமத்து செய்து அங்கன்வாடி மையமாக மாற்றவும்,முத்துசாமிபுரம்,பெத்தேரி தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தை மராமத்து செய்யவும் ரூ.13லட்சம் அனுமதிக்கப்பட்டது.
மேலும் நகராட்சி அலுவலகத்தில் கண்காணிப்பு கேமராக்கள்,நகர்மன்றம் கட்டிட மேல் பகுதியில் சூரியஒளி மின்சார கூரை அமைப்பது போன்ற 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.