தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் நீணட கடலோர பகுதியை கொண்டதாகும்.மன்னார் வளைகுடா கடல் பகுதி என்றழைக்கப்படும் இப்பகுதிய்ல் ஆயிரக்கணக்கான மக்கள் மீன் பிடி தொழில் ஈடுபட்டு வருகின்றனர்.ராமேஸ்வரம்,மண்டம்,கீழக்கரை ,ஏர்வாடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் கடல் சார் வணிகம் அதிகளவில் நடைபெற்று வருகிறது.
தற்போது கிழக்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க விதிக்கப்பட்ட 45 நாள் தடை உள்ளது.தமிழகம், ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஏப்ரல் மாதம் முதல் மே மாதங்களில் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு இனப்பெருக்கும் செய்யும் காலமாகும். இந்த காலங்களில் விசைப்படகுகளில் சென்று மீன்பிடித்தால் மீ்ன் இனம் அடியோடு பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ளதால் பல ஆண்டுகளாக ஏப்ரல் 15ம் தேதி முதல்45 நாட்கள் விசைப்படகுகளில் சென்று மீன்பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது
இந்நிலையில் தற்போது மண்டபம்,கீழக்கரை உளளிட்ட ஊர்களில் பழங்காலத்தில் பிரதான முறையாக இருந்த பழமை வாய்ந்த கூடு வைத்து மீன் பிடிக்கும் முறையை பயன்படுத்தி மீனவர்கள் பலர் மீன் பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்போதைய காலத்தில் இவ்வகை மீன் பிடி முறை அரிதாகி விட்டது
நாட்டு உடை மரத்தின் குச்சி மூலம் இவ்வகை மீன் பிடி கூடுகள் செய்யப்படுகிறது.நாட்டு உடை மரக்குச்சிகள் கிடைக்காத பட்சத்தில் பனைவேர் ,ஈச்சமரம்,கருவோடைவேர் உள்ள்ட்டவைகளையும் பயன்படுத்தி கூடுகளை தயாரிக்கின்றனர் (இப்பகுதிகளில் நாட்டு உடை மரங்கள் வெகுவாக குறைந்து விட்டன.வேலி கருவேலி மரங்கள் அதிகரித்து விட்டன).
வல்லத்திலோ,வத்தையிலோ,கட்டுமரத்திலோ கடலுக்கு இவ்வகை கூடுகளை எடுத்து செல்லும் மீனவர்கள் தனியாகவோ அல்லது சிலருடன் சேர்ந்தோ இத்தொழிலில் ஈடுபடுகிறார்கள்.இத்தொழிலில் ஈடுபட கடலில் 5 பாகத்திற்கு மேல்(ஒரு பாகம் ஆறு அடி என்று குறிப்பிடுகிறார்கள்) கடலுக்கு அடியில் செல்கிறார்கள். காலை அல்லது மாலை நேரங்களில் கடலுக்குள் முப்பது அடி ஆழத்திற்குள் மீன்கள் அதிகம் இருக்கும் பகுதிக்குள் முக கவசத்துடன் முழ்கி செல்லும் மீனவர்கள் கூட்டை அடியில் வைத்து விட்டு அதில் மீனுக்கு இரையையும் போட்டு விட்டு வந்து விடுவர்.
மீன்களுக்கு இரையாக இறால் மண்டையை வைக்கிறார்கள் சின்ன கூட்டுக்கு ஒரு கிலோ இறால் மண்டையும் பெரிய கூட்டிற்கு ஒன்றை கிலோ இறால் மண்டையை இரையாக வைக்கிறார்கள்.பின்னர் ஒரு நாள் இடைவெளி விட்டு மீண்டும் கடலுக்குள் சென்று கூடுகளில் பிடி படும் மீன்களை எடுத்து வருகின்றனர்.இவ்வகையாக பிடிபடும் மீன்கள் ருசியும் அதிகம் இருக்கும் என தெரிவிக்கிறார்கள்.
தகவல் உதவி எஸ்.ரங்கசாமி
இது குறித்து கடல் சார் தொழிலில் ஈடுபட்டு வரும் கீழக்கரை நெய்னா முகம்மது கூறுகையில்,
இவ்வகையான மீன் பிடித்தொழிலில் செய்ய அதிக முதலீடு தேவையில்லை பிடிபடும் மீன்களின் எடை 4 கிலோ முதல் 8 கிலோ வரை இருக்கும்,கடல் வளத்தை பாதிக்காது,பல்வேறு வகையான வலைகளை பயன்படுத்தி மீன்கள் குஞ்சு பருவத்திலேயே பிடிக்கப்படுவது தடுக்கப்படுகிறது.மேலும் கடலில் முழ்கி சங்கு எடுக்க தெரிந்தவர்கள்,கூடு பின்ன தெரிந்தவர்கள் ,கடலில் எந்த பகுதியில் மீன்கள் கிடைக்கும் என்பதை ஓரளவுக்கு தெரிந்தவர்கள் இத்தொழில் வெற்றிகரமாக செயல்படமுடியும்.அரசாங்கம் இவ்வகையான தொழில்களை ஊக்கப்படுத்தவேண்டும் என்றார்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.