கீழக்கரை சேரான் தெரு பகுதியில் குப்பைகளை நிறைந்து காணப்படுவதால் சுகாதார கேடு ஏற்படும் நிலை உள்ளதாகவும் உடனடியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோர்க்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து ஆசிக் மரைக்க கூறியதாவது,
இப்பகுதியில் மக்கள் தாங்களே பணம் செலவழித்து சுத்தம் செய்து வைத்திருந்தனர்.ஆனால் தற்போது நகராட்சி பணியாளர்களே பல்வேறு இடங்களில் சேரும் குப்பைகளை இப்பகுதியில் கொட்டி விட்டு செல்கின்றனர்.இதனால் இப்பகுதியில் மீண்டும் குப்பைகள் குவிந்து அசுத்தமாக காணப்படுகிறது.எனவே நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் இது குப்பைகளை கொட்டி விட்டு அகற்றாமல் செல்லும் பணியாளர்களை கண்காணித்து உரிய தீர்வு காண வேண்டும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.