Sunday, May 26, 2013

கீழக்கரையில் அப்பாவிக‌ள் மீது கொலை வ‌ழ‌க்கு! வ‌ழ‌க்கை சிபிசிஐடியிட‌ம் ஒப்ப‌டைக்க‌ வேண்டும்! இந்திய‌ த‌வ்ஹீத் ஜ‌மாத் த‌லைவ‌ர் எஸ்.எம்.பாக்கர் கோரிக்கை!


 photo:onlinesengishkan.com

இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தேசிய தலைவர் பாக்கர்
ராமநாதபுரத்தில்  நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நிர்வாகம் சீர்கேடாக உள்ளது. சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. சமீபத்தில் நடந்த பெங்களூரு குண்டுவெடிப்பில் மேலப்பாளையத்தைச் சேர்ந்த கிச்சான்புகாரியை, தமிழக போலீஸ் கைது செய்து, கர்நாடக போலீசாரிடம் ஒப்படைத்தது.

அவர் ஏற்கனவே 14 ஆண்டுகள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டவர். கோவை குண்டு வெடிப்பில் ஆயுள் தண்டனை பெற்றவர்களின் வழக்குகளை உச்சநீதிமன்றத்தில் அவர் நடத்தி வருகிறார். இவருடன் சேர்ந்து சில அப்பாவி முஸ்லிம்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது வன்மை யாக கண்டிக்கத்தக்கது.

மரக்காணம் கலவரத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழக அரசு இதை கையில் எடுத்து போலீசாரே கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டுள்ளனர்.

 இன்ஸ்பெக்ட‌ர் க‌னேஷ‌ன்                          டி.எஸ்.பி.சோம‌ சேக‌ர் 
 
 கீழக்கரையில் ஜானகிராமன் என்ற டிரைவர் தற்கொலை செய்ததை, கொலை வழக்காக மாற்றி அப்பாவி முஸ்லிம் ஆண்கள், பெண்கள் மீது பொய் வழக்கு போட்ட கீழக்கரை டி.எஸ்.பி. இன்ஸ்பெக்டரை மாற்ற வேண்டும். இதுகுறித்து சிபிசிஐடி விசாரணை செய்ய வேண்டும்.

ராமநாதபுரம்& கீழக்கரை ரயில் பாலத்தை உடனடியாக அமைக்க வேண்டும். பாஸ்போர்ட் விசாரணைக்கு பெண்களை போலீஸ் ஸ்டேஷனிற்கு அழைக்கக் கூடாது. ராமேஸ்வரம்&தூத்துக்குடி ரயில் பாதையை துரிதமாக அமைத்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாநில செயலாளர் ஜாபர், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முஸ்ஸம்மில்ஹார் ஆகியோர் உடனிருந்தனர்

 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.