பைல்(பழைய படம்) கீழக்கரை பழைய ஜெட்டி பாலத்திலிருந்து கடலில் குதிக்கும் சிறுவர்கள்
ராமநாதபுர மாவட்டத்தில் கீழக்கரை கல்வி நகரமாக உருவாகி வருகிறது.பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆயிரக்கணக்காண மாணவ ,மாணவிகள் படித்து வருகின்றனர்.
மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் பயன் பெறும் வகையில்
கடலோர நகரமான கீழக்கரையில் அரசு சார்பில் நீச்சல் பயிற்சி மையம் அமைக்க விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முன்வர வேண்டும் எனகோரிக்கை எழுந்துள்ளது.இதன் மூலம் ஏராளமான நீச்சல் வீரர்கள் இப்பகுதியில் உருவாவார்கள்.
இது குறித்து சமூக நல ஆர்வலர் செய்யது இப்ராகிம் கூறுகையில்,
எதற்கும் நிகரில்லாத உடற்பயிற்சி நீச்சல். நுரையீரலை வலுவடையச் செய்யும். ஒரு மணி நேர நீச்சல் பயிற்சியினால் உடம்பிலிருந்து 800 கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைகிறது.மேலும் உடல் மென்மையாகி மெருகு பெறுவதோடு உழைக்கும் திறனும் அதிகரிக்கிறது.
தினமும் 30 நிமிட நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
நீச்சல் பயிற்சி ஒவ்வொருவருக்கும் அவசியம் தேவை முன்பெல்லாம் ஏராளமான குளங்கள் நகரில் இருந்தது .இதில் சிறுவர்கள் தங்களுக்கு தெரிந்தவர்கள் மூலம் பயிற்சி பெறுவார்கள்.தற்போது குளங்களே இல்லை என்ற நிலை வந்து விட்டது.ஆர்வமுள்ள சிறுவர்கள் கடற்கரை சென்று நீச்சல் பழகுகின்றனர்.முறையான பயிற்சியாளர்கள் இல்லாமல் கடலில் நீச்சல் பழகுவது சிறுவர்களுக்கு பாதுகாப்பானது அல்ல.கீழக்கரையில் கல்வி பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்களும் நீச்ச்ல் பயிசி பெறுவார்கள்.
எனவே ஜவஹிருல்லாஹ்.எம்.எல்.ஏ உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் அரசை வலியுறுத்தி கீழக்கரை நகரில் அரசாங்கம் நீச்சல் பயிற்சி மையம் அமைக்க நிதிகளை பெற்று தர வேண்டும்.கீழக்கரை டைம்ஸ் இணையதளமும் உரியவர்கள் கவனத்திற்கு எடுத்து செல்லவேண்டும் என்றார்
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.