Friday, May 17, 2013

கீழ‌க்க‌ரை 18வ‌து வார்டில் கிண‌ற்றுநீரில் க‌ழிவுநீர் க‌ல‌ந்து அசுத்த‌ம்!ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ கோரிக்கை!






கீழ‌க்க‌ரை தெற்குதெரு ப‌குதியில் சில‌ வீடுக‌ளில் அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ கிண‌றுக‌ளில் கிடைக்கும் நீரில் சாக்க‌டை க‌லந்து வ‌ருவ‌தால் கிண‌ற்று நீரை ப‌ய‌ன்ப‌டுத்‌த‌ முடியாத‌ அபாய‌ சூழ்நிலை ஏற்ப‌ட்டுள்ள‌து. உட‌ன‌டியாக‌ இது குறித்து ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டுமென‌ பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் கோரிக்கை விடுத்துள்ளன‌ர்.

18 வது வார்டு பகுதியில் 18/ 148 வது நம்பர் வீட்டிலும் ,அது போல 18/225 எண் கொண்ட‌ வீட்டிலும் இன்னும் சில‌ வீடுக‌ளிலும் இது போன்ற‌ சூழ்நிலை நில‌வுவ‌தாக‌ கூறுகின்ற‌ன‌ர். இது குறித்து அவ‌ர்க‌ள் கூறிய‌தாவ‌து இப்பகுதியில் கிணறுகளில், தண்ணீர் சாக்கடை நீராக மாறி வருகிறது. இதனால் நோய் பரவும் நிலை உள்ளது. தினந்தோறும் குழந்தைகளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேண்டியது உள்ளது. வீடுகளில் அமர்ந்து சாப்பிட முடியவில்லை. வீடுக‌ளில் பயன்படுத்தி வந்த கிணற்று நீர், சாக்கடை நீராக மாறி  எத‌ற்கும் பயன்படுவதில்லை.இவ்வ‌ழியாக‌ செல்லும் க‌ழிவுநீர் கால்வாயில் குப்பைக‌ள் நிறைந்து நீண்ட‌ கால‌மாக‌ க‌ழிவு நீர் தேங்கி நிற்ப‌தால் இப்ப‌குதியில் கிண‌றுக‌ளில் சாக்க‌டை ‌கல‌ந்திருக்க‌லாம்.இப்பிர‌ச்சனையிலிருந்து ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் எங்க‌ளை காப்பாற்ற‌ வேண்டும் இவ்வாறு அவ‌ர்கள் தெரிவிக்கின்ற‌ன‌ர்.

இது குறித்து ச‌மூக‌ ஆர்வ‌ல‌ர் த‌ங்க‌ம் ராதாகிருஸ்ண‌ன்  கூறிய‌தாவ‌து,

இத‌ற்கு ‌ பாதாள‌ சாக்க‌டை திட்ட‌மே நிர‌ந்த‌ர‌ தீர்வாகும்.கீழ‌க்க‌ரையில் எதிர்கால‌த்தில் பெரும்பாலான‌ கிண‌றுக‌ளில் இது போன்று சாக்க‌டை க‌ல‌க்கும் சூழ்நிலை ஏற்ப‌ட்டால் நீர் ஆதார‌மே பாதிக்க‌ப்ப‌டும் அபாய‌ம் உள்ள‌து.

பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக அமைத்து பராமரிக்கும் பட்சத்தில், பொதுமக்களின் ஆரோக்கத்துக்கு நிரந்தர பயனளிக்கும். கழிவு நீர், சாக்கடை நீர் திறந்த வெளியில் தேக்கம் தவிர்க்கப்படும். துர்நாற்றம் வீசுவது தவிர்க்கப்படும். வீட்டிற்குள் அமைக்கும் செப்டிக் டேங்க் அவசியமில்லை. கொசுவினால் பரவும் யானைக்கால் நோய் முற்றிலும் தடுக்கப்படும். நோய் பரப்பும் சில பூச்சுகள், கிருமிகள் உற்பத்தியை தடுத்து நோய் பரவுதை தடுக்கலாம். கழிவு நீர் தேக்கத்தால் கிணற்று நீர், ஆழ்த்துளை கிணற்று நீர் மாசுப்படுவது தவிர்க்கப்படுகிறது. பன்றி போன்ற விலங்கினங்களின் தொல்லை குறையும்.

மழைக்காலத்தில் சாக்கடை நீருடன் மழை நீர் கலந்து சாலைகளில் வழிந்து ஓடாது. பாதாள சாக்கடையில் வெளியேற்றப்படும் கழிவுநீரை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தர நிர்ணயப்படி சுத்தம் செய்வதால், அந்நீரை விவசாயத்திற்கு மீண்டும் பயன்படுத்தலாம்.  விவசாயத்திற்கு சுத்திரிக்கப்பட்ட சாக்கடை நீர் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். அதனால், சுற்றுப்புற‌ சுகாதார மேம்பாட்டிற்கு நிரந்தர பயன் அளிக்கும்.த‌ற்போது கீழ‌க்க‌ரையின் க‌ழிவு நீர் சுத்திக்க‌ப‌டாம‌ல் நேர‌டியாக‌ க‌ட‌லில் க‌ல‌க்கிற‌து இத‌னால் க‌ட‌ல் நீர் மாச‌டைகிற‌து.இத்திட்ட‌ம் செய‌ல்ப‌டுத்த‌ப்ப‌ட்டால் க‌ட‌ல் நீர் மாடைவ‌து த‌டுக்க‌ப்ப‌டும்.கீழ‌க்க‌ரை சுகாதார‌ம் மேம்ப‌டும் என்றார்.

இது குறித்து ந‌க‌ராட்சி தலைவ‌ர் ராவித்துல் க‌த‌ரியாவிட‌ம் கேட்ட‌ போது,

க‌ழிவு கால்வாய்க‌ளில் குப்பைக‌ளை போடாதீகள் ப‌ல‌முறை வேண்டுகோள் விடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.குப்பைக‌ளை அதில் வீசினால் நாம்தான் பாதிக்க‌ப்ப‌வோம் என்ப‌தை வீசுப‌வ‌ர்க‌ள் ஏன் நினைப்ப‌தில்லை.குப்பைக‌ள் அக்ற்ற‌ப்ப‌ட்டு க‌ழிவு நீர் தேங்காம‌ல் இருப்ப‌த‌ற்கும் ந‌ட‌வ‌டிக்க‌ எடுக்க‌ப்ப‌டும் மேலும் குறிப்பிட்ட‌ விடுக‌ளில் உள்ள‌ கிண‌ற்று நீரில் சாக்க‌டை நீர் கல‌ந்து வ‌ருவ‌து எத‌னால் என்று அறிந்து உட‌ன‌டியாக‌ ந‌ட‌வ‌டிக்கை மேற்கொள்ள‌ப்ப‌டும்.இது போன்ற‌ குறைக‌ள் இருக்கும் ப‌ட்ச‌த்தில் ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் என்ற‌ முறையில்  என்னிட‌ம் அலுவ‌ல‌க‌த்தில் தெரிவிக்கால‌ம் என்றார்





 

3 comments:

  1. Funny adapter even cooperation and public people?

    ReplyDelete
  2. மங்காத்தாவின் தங்கச்சி மகன்May 17, 2013 at 6:39 PM

    மறு பதிப்பு

    கீழக்கரையில் முஸ்லீம் பஜார் அருகே குவிந்து கிடக்கும் குப்பைகளால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை அகற்ற உடனடியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குப்பைகளை அகற்ற நகராட்சியில் தற்போது 24 துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
    முஸ்லீம் பஜார் பகுதியை சேர்ந்த அகமது அப்துல் காதர் கூறுகையில்,
    கடந்த ஒரு வாரமாக குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால், கொசு தொல்லை அதிகரித்துள்ளது. இரவில் தூங்க முடியாமல் தவித்து வருகிறோம். வழக்கமாக எங்கள் பகுதியில் 3, 4 நாட்களுக்கு ஒருமுறைதான் குப்பைகளை அகற்றுகின்றனர். இது குறித்து நகராட்சியில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. குப்பைகளை தினமும் அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


    இது குறித்து ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் க‌த‌ரியாவிட‌ம் கேட்ட‌ போது,

    ஒரு வார‌மாக‌ அக‌ற்றாம‌ல் இருக்க‌ வாய்ப்பில்லை.ஒவ்வொரு நாளும் குப்பைக‌ள் அக‌ற்ற‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.முத‌ல் நாள் இர‌வில் குப்பைக‌ள் ஒரு இட‌த்தில் சேரும் போது ம‌று நாள் உட‌ன‌டியாக‌ அக‌ற்ற‌ப்ப‌டுகிற‌து.இது போன்று இருக்கும் ப‌ட்ச‌த்தில் இது குறித்து உட‌ன‌டி எடுக்க‌ப்ப‌டும் மேலும் த‌ற்போது கூடுத‌ல் துப்புர‌வு ப‌ணியாள‌ர்க‌ள் நிய‌மிக்க‌ப்ப‌ட்டு உள்ளார்க‌ள்.என‌வே துப்புர‌வு ப‌ணிக‌ள் துரித‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.குறைக‌ள் இருந்தால் சுட்டி காட்டுங்க‌ள் உட‌ன‌டியாக‌ ச‌ரி செய்ய‌ ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் த‌யாராக‌ உள்ள‌து. என்றார்
    Posted by Hameed Yasin at 9:16 AM
    Email This
    BlogThis!
    Share to Twitter
    Share to Facebook

    1 comment:


    மங்காத்தாவின் தங்கச்சி மகன்May 13, 2013 at 6:58 PM
    நகரின் முதல் குடிமகளின் பதில் மிகுந்த வேதனை அளிக்கிறது. படத்தில் உள்ள நபர் குப்பைக்கு அடுத்துள்ள வீட்டின் உரிமையாளர். அப்போ அவர் புனைநது உரைக்கிறாரா? மேலும் குப்பைக்கு எதிரில் தான் துணை சேர்மனின் அலுவலகம் உள்ளது. அவர்களும் வீட்டு உரிமையாளரின் கூற்றை மறுக்கிறார்களா? என்னதான் நடக்கிறது?

    இப்போதும் கூட அதாவது புதிய துப்பரவு பணியாளர்கள் நியமித்த பிறகும் சந்துக்களில் பெருக்குவதில்லை. வாரத்தில் ஒரு நாள் கூட சந்துகளில் பெருக்க நடவடிக்கை எடுக்க கூடாதா? இதற்கு என்ன உடனடி பதில் வைத்திருகிறார்களோ ?

    சந்துகளில் உள்ளவர்களும் நீங்கல் கேட்கிற வரியை செம்மையாகத் தானே கட்டுகிறார்கள்.அப்ப்டி இருக்கையில்..... ஏன் இந்த அவல நிலை?

    மற்ற பகுதிகளில் காவேரி கூட்டு குடி தண்ணீர்வினியோகம் ஏதோ பெயரளவில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் கீழக்கரையில்...? ஆனால் தண்ணீர் வரியை மட்டும் வீடு தேடி வந்து வசூலிக்கிறீர்கள்? இது என்ன நியாயம்?

    வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி

    ReplyDelete
  3. மங்காத்தாவின் தங்கச்சி மகன்May 17, 2013 at 7:04 PM

    இப்போது உள்ள நிர்வாகம் பதவி ஏற்று ஒன்ணரை ஆண்டுகளை தாண்டி விட்டது.நடந்து முடிந்த நகராட்சி தேர்தல்,நகர் சுகாதாரத்தை முன்னிலைப் படுத்தி குப்பைக்கரையான கீழக்கரை நகரை முடிந்த அளவு தூய்மையான நகராக மாற்றும் முகமாக பரவலாக பேசப்பட்டு நகரின் முதல் குடிமகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் வேட்பாளர்கள் இது சமபந்தமாக பல் வேறு வகையான வாக்குறுதிகளை கூறி அதன் பயனாக வாகை சூடி பதவியில் அமர்ந்தனர்.

    அவர்கள் முன் நாம் வைக்கும் பல கேள்விகளில் ஒன்று:

    ஊர் முழுக்க வாருகால்வாய்களுக்கு மூடி போட ஒன்ணரை ஆண்டு காலம் போதாதா? கோடிகணக்கில் நிர்வாகத்தில் பணம் இருந்தும் அந்த பணியை முடிக்காததன் நோக்கம் தான் என்ன? மூடி போட்டிருந்தால் இந்த அடைப்புகள் ஏற்படாது அல்லவா? இதற்காக முதல் குடிமகளும் பொது மக்களை நோகக் கூடிய அவசியம் ஏற்பட்டிருக்காது அல்லவா?

    இனியாவது சிந்தித்து விரைந்து செயல் பட வேண்டுகிறோம்.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.