கீழக்கரை நகராட்சி சார்பாக நடை பெற்ற திட்டப் பணிகளுக்கு வழங்கப்பட்ட தொகையில் 50 சதவீதத்திற்கு நடைபெற்று இருப்பதாக நகராட்சி நிர்வாகம் நிரூபித்தால் ராஜினாமா செய்யத் தயார் - 18 வது வார்டு கவுன்சிலர் சவால் !
கீழக்கரை டைம்ஸ் இணைய தளத்தில் கடந்த 08.05.2013 அன்று, மரியாதைக்குரிய நகர் மன்ற தலைவி அவர்கள் நான் எனது வார்டு சம்பந்தமாக எதையும் அவரிடம் கூறுவது இல்லை என்றும் எனது வார்டு குறைகளை தீர்ப்பதில் அக்கறை இல்லை என்றும் கூறி உள்ளார்கள்.
எனது வார்டு மீது எனக்கு அக்கறை இல்லையா ? என்பதையும் என் மீது அவர் வைத்திருக்கின்ற குற்றச் சாட்டு உண்மையா என்பதை, என் மீது பாசம் வைத்திருக்கும் வாசகர்களுக்கும், நடு நிலையாளர்களுக்கும், வாசகர்களுக்கும் விளக்க கடமைப்பட்டு இருக்கிறேன்.
எனது வார்டுக்கு தேவையான கோரிக்கைகளை 22.10.2012 அன்று நகர் மன்ற தலைவி அவர்களிடம், எழுத்துப் பூர்வமாக வேண்டுகோள் விடுத்திருக்கிறேன். இதில் அவர் கூறும் பாபு ஆட்டோ ஸ்டாண்ட் எதிரில் உள்ள கால்வாய் இணைக்கும் அபாயக் குழியில் தொட்டி அமைத்து மூடி போடும் படியும் கேட்டிருக்கிறேன்.
இது சம்பந்தமாக என் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட நகர் மன்ற தலைவி அவர்கள் 31.10.2012 அன்று நடை பெற்ற சாதாரண கூட்டத்தில் பொருள் 36 ல் ரூ.4,50,000 மதிப்பிலும் 29.11.2012 அன்று நடை பெற்ற சாதாரணக் கூட்டத்தில் பொருள் 15 ல் ரூ. 9500மதிப்பிலும், 30.01.2013 அன்று நடை பெற்ற சாதாரணக் கூட்டத்தில் பொருள் 28 ல் ரூ. 10000 மதிப்பிலும், மன்ற ஒப்புதல பெற்று, இது வரை பனி ஆணை வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
எனது வார்டு மீது எனக்கு அக்கறை இல்லை என்று கூறிய நகர் மன்றத் தலைவி அவர்கள் உண்மைக்கு மாற்றமாக பேட்டி அளித்து இருப்பதால், என் மீது பாசம் வைத்திருக்கும் இணைய தள வாசகர்கள் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, நான் என் வார்டு சம்பந்தமாக கொடுத்த மனு நகலையும் மன்ற அஜந்தா நகலையும் இத்துடன் இணைத்துள்ளேன்.
இதிலிருந்தே பொது மக்களாகிய யாவரும் ஒன்றை புரிந்து கொள்ளலாம். கீழக்கரை மக்கள் மீதும், நகர் நலத் திட்டங்கள் மீதும், நகர் மன்ற தலைவிக்குத் தான் அக்கறை இல்லை என்பதையும், அவருடைய தலைமையில் எந்தப் பணிகளும் சரிவர செயல்பட வில்லை என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ளலாம்.
மேலும் கீழக்கரை நகராட்சி சார்பாக நடைபெற்ற பணிகளையும் அதற்கு வழங்கப்பட்ட தொகையையும், அதன் தரத்தையும் அனைவரும் கொஞ்சம் புரிந்து கொள்ள வேண்டும். 11 வது வார்டு ஜின்னா தெருவில் இருக்கும் பொதுக் கழிப்பிடத்தில் கூடுதல் கழிப்பறை கட்டும் பணி முடிவுற்று அதற்காக வழங்கப்பட்ட தொகை ரூ 3,49,333 ஆகும். ஆனால் செய்யப்பட்ட வேலைகள் ரூ.1,30,000 கூட இருக்காது.
புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் நலன் கருதி மின்சார பில் கட்டணம் கட்டும் அலுவலகம் செயல்படுத்த ஏற்கனவே இருந்த ஒரு அறையை புதுப்பிக்க நகராட்சியால் வழங்கப்பட்ட தொகை ரூ. 1,97,812 ஆகும். ஆனால் செய்யப்பட்ட வேலைகள் ரூ. 50000 கூட இருக்காது. இதில் வருத்தத்திற்கு உரிய விஷயம் என்னவென்றால், இதுவரை ஜின்னா தெரு கழிப்பிடமோ அல்லது மின்சார பில் கட்டணம் கட்டும் அலுவலகமோ இது வரை மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. ஆனால் பணிகள் முழுதும் நிறைவடைந்து விட்டதாம்.
மேலும் நன்றாக இருந்த மேலத் தெரு செய்யது முஹம்மது அப்பா தர்ஹா சாலையை, பெயருக்கு சாலை போடுவதாக மன்ற ஒப்புதல் பெற்று,சுமார் 350 மீட்டர் அளவுக்கு சாலை போடா செய்த செலவு எவ்வளவு தெரியுமா? ரூ. 200000 (இரண்டு இலட்சம்) மட்டுமே. ஆனால் அதற்கு வழங்கப்பட்டதாக கணக்கில் வரும் தொகை ரூ.11,00000 (பதினோரு இலட்சம்) என்று தெரிய வருகிறது.
நகராட்சி சார்பாக நடை பெற்ற திட்டப் பணிகளுக்காக, ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்ட தொகையில் 50 சதவீதம் வேலைகள் நடை பெற்று இருப்பதாக நகராட்சி நிர்வாகம் அதிகாரப் பூர்வமாக ஏதேனும் ஒரே ஒரு பணியை நிரூபித்தால் "நான் ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன்" என்பதனை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
நகராட்சி சார்பாக நடை பெற்ற அனைத்து திட்டப் பணிகளிலும், பெரும் அளவு ஊழல் நடை பெற்றுக் கொண்டிருப்பதை, மக்களுக்கு நீதி மன்றம் மூலம் நிரூபித்து யார் தவறு செய்து இருந்தாலும், அவர்கள் மீது சட்டப் பூர்வமான நடவடிக்கை மேற்கொள்வேன். என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைத்து செயல்களையும்,எல்லாம் வல்ல ஏக இறைவன் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
உங்களை சொல்லி குற்றமில்லை.எங்களை சொல்லி குற்றமில்லை. காலம் செய்த குற்றமிது உங்களை எல்லாம் நாங்கள் மக்கள் பிரதிநிதிகளாக பெற்றது.
ReplyDeleteஅது சரி கீழக்கரை டைம்ஸின் நிருபர் அரசு பிரதிநிதியான கீழக்கரை நகராட்சி ஆணையாளரை இது சம்பந்தமாக பேட்டி கண்டு சீர் கெட்ட நிர்வாகம் காரணமாக மண்டை காய்ந்து போய் இருக்கும் இவர்களுக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு தெளிவு படுத்தலாமே. ஏனென்றால் மக்கள் வரிப் பணத்திலிருந்து கிடைத்த அரசு காசுகளுக்கு அவரும் கட்டாய முதல் நிலை பொறுப்பாளி தானே.
இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் காலம் உள்ளது. இன்னும் பல கோடிகள் வர இருக்கிறது. என்ன என்ன நடக்க போகிறதே. படைத்த ரப்பே நீ ஒருவன் மட்டுமே அறிவாய்
Dear keelakarai times
ReplyDeleteInatha ward member news thavira.
For news no?
By
Abdul
Uae
எத்தனை காலம் தான் ஏமாத்துவார் இந்த நாட்டிலே... இந்த நாட்டிலே... கொஞ்சம் கூட மறுமையைப் பற்றிய பயம் இல்லையே?
ReplyDeleteநம்ம சேர்மனும் துணைச் சேர்மனும் கை கோர்த்து(கூட்டுச் சேர்ந்து)ட்டாங்களோ?