Saturday, May 18, 2013

குடிநீர் விநியோக‌த்திற்க்காக‌ மாலாக்குண்டுவில் 5 ஆண்டுக‌ளுக்கு பிற‌கு கிண‌றுக‌ள் தூர் வாரும் ப‌ணி!



கீழக்கரையில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாடுக்கு தீர்வு காணும் வகையில் மாலாக்குண்டுவில் உள்ள குடிநீர் கிணறு ஐந்து ஆண்டுகளுக்கு பின் தூர்வாறும் பணி நடைபெறுகிறது.கீழக்கரை நகராட்சியில் 21 வார்டுகளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.
கீழக்கரையில் காவிரி நீர் முழுமையான அளவு சப்ளை செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் கிடைக்க‌ பெறும் சிர‌ம‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். போதியளவு குடிநீர் கிடைக்காததால் மாட்டுவ‌ண்டி ம‌ற்றும் லாரி நீரை விலைக்கு வாங்கும் நிலை உள்ளது.இந்நிலையில் ந‌க‌ராட்சி சார்பில் முதற்கட்டமாக இரண்டு மாதங்களுக்கு வாகனங்களில் மக்களுக்கு குடிநீர் வினியோகம் நடந்து வருகிறது.மக்களுக்கு கூடுதலாக குடிநீர் வழங்கும் வகையில் மாலாக்குண்டுவில் உள்ள குடிநீர் கிணற்றை சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.
 நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா கூறியதாவது;
மாலாக்குண்டுவில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மூன்று குடிநீர் கிணறுகள் உள்ளது.கடந்த ஐந்து ஆண்டுளுக்கு மேலாக‌  பராமரிப்பு இல்லாமல் இருந்த வந்தது.மக்களுக்கு கூடுதலாக குடி நீர் வழங்கும் வகையில் மூன்று கிணறுகளும் தற்போது தூர் வாரப்படுகிறது.கிணறுநீரை குடிநீர் வடிகால் வாரிய பரிசோதனை மையத்திற்கு அனுப்பப்பட்டு அவர்களது ஒப்புதல் கிடைத்ததும், தலைமை நீரேற்று நிலையத்திற்கு குழாய் வழியாக தண்ணீர் கொண்டு செல்லப்படும். இதன் மூலம் தினமும் கூடுதலாக ஒரு லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

தற்போது சுழற்சிமுறையில் அனைத்து வார்டு
களுக்கும் லாரி மற்றும் டிராக்டர்களில் இலவசமாக நாள்தோறும் 72 ஆயிரம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.லாரி செல்ல முடியாத பகுதிகளுக்கு டிராக்டர் மூலமாக தண்ணீர் வழங்கப்படுவதால் குடி த‌ட்டுப்பாடு ஓர‌ள‌வு குறைந்துள்ள‌து என்றார்.

 

2 comments:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்May 18, 2013 at 6:55 PM

    அல்ஹம்துலில்லாஹ். இதிலும் தர்க்கம் இல்லாமல் விரைந்து செயல்பட்டு மக்களின் குறிப்பாக் கோஷா பெண்கள் குடிநீருக்காக படும் அவதியை நீக்க உங்களுக்காக பிரார்த்திக்கின்றோம்.

    லாரி ,டிராக்டர் மற்றும் குடி நீரை விலைக்கு விற்கும் மாட்டு வண்டி போக முடியாத சந்துக் களில் குடிநீருக்காக மக்கள் படும் அவதியை எடுத்துரைக்க கீழக்கரை டைம்ஸ் தவறியமை கண்டு மனம் வலிக்கிறது.

    ReplyDelete
  2. அன்புடன் கீழக்கரை டைம்ஸ்க்கு,

    கீழ்க்கண்ட சவாலுக்கு நம்ம கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திடமிருந்து மறுப்பு தெரிவித்து ஒரு பதிலையும் இன்றுவரை காணோமே! மவுனம் சம்மதத்துக்கு அறிகுறியோ?
    Saturday, May 11, 2013
    க‌வுன்சில‌ர் ப‌த‌வியை ராஜினாமா செய்ய‌ த‌யார்!க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகிம் ச‌வால்!

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.