Wednesday, May 15, 2013

கீழ‌க்க‌ரையில் அதிக‌ரித்த‌ நாய்க‌ளை க‌ட்டுப‌டுத்த‌ 50க்கும் மேற்ப‌ட்ட‌ நாய்க‌ளுக்கு க‌ருத்த‌டை சிகிச்சை!



கீழ‌க்க‌ரை நகராட்சியில் உள்ள, 21 வார்டுகளில், 50 ஆயிர‌த்திற்கும் மேற்ப‌ட்ட‌ ம‌க்க‌ள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள பெரும்பாலான தெரு, சாலைகளில் ஏராள‌மான‌ நாய்கள் சுற்றித் திரிந்தன‌.

இவற்றில் சில நாய்கள், சாலையில் நடந்து செல்பவர்க‌ளை கடிப்ப‌தாக‌வும் ,சாலையில் சுற்றித்
திரியும் நாய்களால், இருசக்கர வாகனங்களில் அடிக்கடி விபத்துக்கு உள்ளாவ‌தாகவும்,ப‌ள்ளி குழ‌ந்தைக‌ள் ரோட்டில் ந‌ட‌க்க‌ அச்ச‌ம‌டைவதாக‌வு என‌வே கீழ‌க்க‌ரை    நகராட்சியில் அதிகரித்து வரும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என, பொது மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்த‌ன‌ர்.

 
இதையடுத்து, நகராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் கத‌ரியாவின் ந‌ட‌வ‌டிக்கையின் பேரில் கீழ‌க்க‌ரை ந‌க‌ரில் அதிக‌ரித்து வ‌ரும் நாய்களை க‌ட்டுப்ப‌டுத்த‌ அவைக‌ளுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நகரில் சுற்றி திரிந்த 50க்கும்  மேற்ப‌ட்ட நாய்களை ந‌க‌ராட்சி  ப‌ணியாள‌ர்க‌ள் உத‌வியுட‌ன்‌ பிடித்தனர்.பின்ன‌ர் இந்த‌ நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்யப்பட்டது.

நாய்களுக்கு மயக்க ஊசி போட்டு கருத்தடை சிகிச்சையை கால்ந‌டை ம‌ருத்துவ‌ர் செய்தார். மேலும்  நாய்களுக்கு வெறி தன்மை குறையவும் ஊசி போடப்பட்டது.

 

1 comment:

  1. தெருக்களில் குப்பை கூளங்கள் அதிகமாக கிடப்பதினால் தான் இரையை தேடி நாய்கள் கூட்டம் கூட்டமாக வருகிறது அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில்தான் அதிகமாக வருகிறது குப்பை கூளங்களை தினமும் அகற்றினாலே போதும் நாய்கள் வருவது குறைந்து விடும்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.