Saturday, May 11, 2013

கீழ‌க்க‌ரையில் சிற‌ந்த‌ ம‌திப்பெண்க‌ளை மாண‌வியர் பெற்றாலும் பெரும்பாலான‌‌ பெற்றொர்க‌ள் உய‌ர் க‌ல்விக்கு அனுப்புவ‌தில்லை! ப‌ள்ளிக‌ளின் தாளாள‌ர் வ‌ருத்த‌ம்!


இஸ்லாமியா ப‌ள்ளிக‌ளின் தாளாள‌ர் எம் எம் கே முகைதீன் இப்ராஹிம் கூறிய‌தாவ‌து,

+2 தேர்வு எழுதி  முடிவுக‌ளை பெற்ற‌ அனைத்து மாண‌வ‌,மாண‌விக‌ளுக்கும் வாழ்த்துக்க‌ள்.

கீழ‌க்க‌ரையில் ஏராள‌மான‌ மாண‌விக‌ள் 1000 ம‌திபெண்க‌ளை பெற்றுள்ள‌ன‌ர் மேலும் அதிக‌ ம‌திப்பெண்க‌ளாக‌  1155 ,1146 என‌ பெற்று சாத‌னை ப‌டைத்துள்ளன‌ர்.த‌மிழ‌க‌த்தின் அதிக‌ ம‌திப்பெண் எடுத்த‌வ‌ர்க‌ளுக்கும் இவ‌ர்களுக்கும் மிக‌ குறைந்த‌ அள‌வே ம‌திபெண்க‌ள் வித்தியாச‌ம் வ‌ருங்கால‌ங்க‌ளில் த‌மிழ‌க‌த்திலேயே அதிக‌ ம‌திப்பெண் பெற்ற‌ மாண‌விய‌ர் கீழ‌க்க‌ரையிலேயே உருவாகுவார்க‌ள்.

ஆனால் கீழ‌க்க‌ரையில் மிக‌ வ‌ருத்ததுக்குறிய‌ நிக‌ழ்வு என்ன‌வென்றால் பெரும்பாலானோர் இவ்வ‌ள‌வு ம‌திப்பெண்க‌ள் பெற்ற‌ மாண‌விய‌ரை பொருளாதார‌ சூழ்நிலை ந‌ன்றாக‌ இருந்தும் உய‌ர் க‌ல்வி க‌ற்க‌  அனுப்புவ‌தில்லை பள்ளி ப‌டிப்புட‌ன் க‌ல்வியை நிறுத்தி விடுகின்ற‌ன‌ர்.சென்ற ஆண்டு‌ எங்க‌ள் ப‌ள்ளி மாண‌வி கீழ‌க்க‌ரையிலேயே அதிக‌ ம‌திபெண்க‌ள் எடுத்தார் ஆனால் அவ‌ரின் குடும்ப‌த்தார் அவ‌ரை மேல் ப‌டிப்பு தொட‌ர‌ அனும‌திக்க‌வில்லை.இது அக்குடும்ப‌த்தாரின் உரிமை என்றாலும் ச‌முதாய‌த்திற்க்கு ப‌ய‌ன் ப‌ட‌ வேண்டிய‌ மாண‌வியின் க‌ல்வி பாதியிலேயே நின்று விட்ட‌தே என்ற‌ ம‌ன‌ வ‌ருத்த‌ம் எங்க‌ளுக்கு ஏற்ப‌ட்டது.

க‌ல்வியில் பின் த‌ங்கி இருக்கும்  ச‌மூக‌த்தில் சிற‌ந்த‌ மாண‌வியின் ப‌டிப்பு பாதியிலேயே நிறைவு பெறுவ‌து என‌பது மிக‌வும் வேத‌னைய‌ளிக்கும் நிக‌ழ்வு.

மேல் ப‌டிப்புக்கு க‌ல்லூரி செல்வோமா? என்ற‌ நிச்ச‌ய‌ம் இல்லாத‌ நிலையில் கீழ‌க்க‌ரையில் மாண‌விய‌ர் இவ்வ‌ள‌வு ம‌திப்பெண்க‌ளை எடுக்கும் நிலையில் இவ‌ர்க‌ளுக்கு உயர் க‌ல்விக்கான‌ உத்த‌ர‌வாத‌த்தையும்,ஊக்க‌த்தையும் அளிப்போமானால் கீழ‌க்க‌ரை மாணவிக‌ள் க‌ல்வியில் பெரும் சாத‌னை ப‌டைப்பார்க‌ள் என்ப‌து நிச்ச‌ய‌ம்.

எனவே கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ பெற்றோர்க‌ள் த‌ங்க‌ள‌து பிள்ளைக‌ளை ப‌ள்ளி ப‌டிப்புட‌ன் நிறுத்திவிடாம‌ல் உய‌ர் க‌ல்வி பெற‌ அனும‌தியுங்க‌ள்.

இவ்வாறு அவ‌ர் கூறியுள்ளார்.
 

6 comments:

  1. கீழக்கரை, பெண்களுக்கு மிக பாதுகாப்பான ஊர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், பெண்கள் மேல்படிப்பு செல்லாமல் இருப்பது யாருக்கும் பயந்து கிடையாது, மேல் படிப்பு படிக்க எங்களுக்கும் ஆசை தான், ஆனால் ஆண் ஆதிக்கம் பிடித்தவர்கள் நாங்கள் முன்னேற விரும்புவதில்லை, உங்கள் மகள் கல்லூரிக்கு சென்றால் கல்யாணம் செய்ய மாட்டேன் என்று வருங்கால கணவர்கள் எங்கள் பெற்றோரை மிரட்டும் போது நாங்கள் என்ன செய்ய முடியும். தேவை இல்லாமல் பெண்கள் ஒழுக்கத்தை குறை கூறும் சிலர் முதலில் மற்ற ஊர்களுக்கு சென்று பார்க்கட்டும், பெண்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று.! தாளாளர் கூறுவது மிகவும் சரி, எத்தனையோ முஸ்லிம் பெண்கள் டாக்டராகவும், வக்கீலாகவும், கல்லூரி முதல்வராகவும், பள்ளி தாளாளராகவும், IAS, IPS இருக்கும் போது எங்களை மட்டும் நான்கு சுவற்றிட்குள் அடைக்க நினைப்பது என்ன நியாயம்..???

    ReplyDelete
  2. மங்காத்தாவின் தங்கச்சி மகன்May 11, 2013 at 10:09 PM

    இஸ்லாமிய பள்ளிகளின் தாளாளர் சகோதரர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராஹிம் அவர்களின் ஆதங்கம் சிந்தனைக்கு உரியதே.கீழக்கரை பெண்கள் உயர் கல்வி பயில நகரிலேயே தாஸிம் பீவி அப்துல் காதர் வனிதையர் கல்லூரி இருந்தும் சில பெற்றோர்களின் பிற்போக்கு சிந்தனையால் பல மாணவிகளின் உயர் கல்வி கனவு சிதைக்கப்படுவது வேதனைக்குரியதே.

    அதே நேரத்தில் சகோதரி யாஸ்மின் அவர்களின் மனக் குமுறலையும் ஒதுக்கி தள்ளுவதற்கில்லை.இருப்பினும் கீழக்கரையில் வருடத்திற்கு வருடம் இஸ்லாமிய பெண்களின் உயர் கல்வி பயிலும் நோக்கம் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. இரு பாலர் சேர்ந்து படிக்கும் சதக் பொறியியல் கல்லூரியில் எத்தனையோ நமதூர் பெண்கள் B.Arch போன்ற தொழில் பட்டப் படிப்புகளை படித்துள்ளார்கள். இப்போதும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு அவர்களின் பொற்றோரின் ஊக்கமே காரணம்.அப்படி பட்ட பெற்றோர்களும் ஊரில் உண்டு.இவர்களை பார்த்து மற்றவர்கள் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.இதனால் சகோதரி யாஸ்மின் போன்றவர்களின் உள்ள குமுறல் தீர வழி உண்டாகும்.

    பெண்களுக்கு உயர் கல்வி பெறும் வாயப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதின் உயர்ந்த நோக்கம் வேலைக்கு செல்லுவதற்காக அல்ல.அவளின் வாரிசுகளை சிறந்த நன்மக்களாக உருவாக்கவும் தான் என்பதை பெற்றோர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

    சகோதரி யாஸ்மினின் ஆதங்கம் வருங் காலங்களில் முற்றிலுமாக களைய வல்ல ர்ஹ்மானிடதில் அனைவரும் பிரார்த்திப்போமாக.ஆமீன்.

    ReplyDelete
  3. நாங்கள் குமுறுவது எல்லாம் எங்களுக்காக மட்டும் அல்ல ஒட்டு மொத்த சமுதாயதிற்க்காகதான். நாங்கள் படிக்க வில்லை என்றால் பரவாயில்லை அட்லீஸ்ட் ஆண்கள் நீங்களாவது படித்து நல்ல மார்க் எடுக்க வேண்டியது தானே? பெரிய டாக்டராகவோ கலெக்டராகவோ IAS, IPS ஆகவோ வர முயற்சிக்க வேண்டியது தானே?? எத்தனை வாலிபர்கள் ஊரில் சும்மா சுத்திக்கொண்டு இருக்கிறார்கள் என்று கீழக்கரை டைம்ஸ் ஒரு சர்வே எடுத்து போட்டால் நல்லது.

    ReplyDelete
    Replies
    1. சகோதரி யாஸ்மின் அவர்களின் பதிலுக்கு நின்றி.நீங்கள் சொல்கிறீர்கள் அட்லீஸ்ட் ஆண்கள் நீங்களாவது படித்து நல்ல மார்க் எடுக்க வேண்டியது தானே? பெரிய டாக்டராகவோ கலெக்டராகவோ IAS, IPS ஆகவோ வர முயற்சிக்க வேண்டியது தானே??என்று.ஆனால் எத்தனை படித்த ஆண்கள்..staying in our native or even how many of them or working in india???..75% of them are in Abroad spl in (Dubai).When one guy is getting Engaged first question was where do the boy work?.They are not asking about what work he has doing and what he has studied.
      (for example: One man is working as office boy in Dubai and another man is working in india as Manager who will get married First???)

      Delete
    2. To mr mohamed, girls are not demanding for Arab slave, most of the girls seek honest and self-confident persons only.

      Delete
  4. முற்போக்கு சிந்தனை வழி வரும் பெற்றோரையும், திரும்பவும் பிற்போக்கிற்கு செலுத்தி விடுகிறது, சில அறிவிலிகளின் (இரு பாலாரும்) இழிசெயல்கள்.
    பிள்ளைகள் மற்றும் பெற்றோரின் பரஸ்பர புரிதல் மற்றும் இயல்பான யதார்த்தமான கலந்துரையாடல், பிள்ளைகளின் நல்ல எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.