மன்னார் வளைகுடாவில் சுமார் 560 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வான்தீவு, கோசுவாடி தீவு, விலாங்குசல்லி தீவு, காரைசல்லி தீவு, உப்பு தண்ணீர் தீவு, புளுனிசல்லிதீவு, நல்லதண்ணீர் தீவு, அணைப்பார் தீவு, வாலிமுனை தீவு, அப்பாதீவு, பூவரசன்பட்டி தீவு, தலையாரி தீவு, வாழைத் தீவு, முல்லைத் தீவு, முயல்தீவு, மனோலிதீவு, மனோலிபுட்டி தீவு, பூமரிச்சான் தீவு, குருசடை தீவு, சிங்கிலி தீவு என மொத்தம் 21 தீவுகள் உள்ளது. இந்த தீவுகளில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் முயல், நாய் போன்ற விலங்குகள் வசித்து வந்தன.
இதில் பூவரசன் பட்டி தீவு நீரில் முழ்கி விட்டதாக கூறப்படுகிறது.
இது தவிர இந்த தீவுகளில் அரியவகை மூலிகைகளும், தாவர வகைகளும் முன்பு இருந்ததாக தெரியவருகிறது. மன்னார்வளைகுடா பகுதியில் நாட்டு படகுகளில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் தங்களது ஓய்வு இடமாக இந்த தீவுகளை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 1986ம் ஆண்டில் 21 தீவுகளையும் தேசிய கடல்வளப் பூங்கா என அரசு அறிவித்தது. அரிய கடல் வாழ் உயிரினங்கள் வாழும் பகுதியாக அறியப்பட்ட்ட மன்னார் வளைகுடா பகுதி தீவுகள் மன்னார்வளைகுடாவில் உயிர்கோள காப்பக அறக்கட்டளையினர் தீவுகளின் மீது அதிக கவனம் செலுத்த தொடங்கினர்.
இந்த தீவுகளை சுற்றிலும் செயற்கையான பவளப்பாறைகளை உருவாக்கினர்.தீவுகளில் அதிக அளவில் செடிகளை நட்டு பராமரிக்க தொடங்கினர். தீவு பகுதியையும், அதனை ஒட்டியுள்ள பவளப்பாறைகளையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் கோயா மிதவைகளை மிதக்கவிட்டுள்ளனர்.
இந்நிலையில் கீழக்கரை பகுதியில் அரசு சார்பில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் தீவுகளைகளையும்,பவளபாறைகளையும் பொதுமக்கள் கண்டு வரகண்ணாடி இழை படகுகளை அரசு இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் பிரமுகர் ஹசனுதீன் கூறியதாவது,
கீழக்கரை கடல் பகுதியில் உள்ள அப்பா தீவு 28.63-ஹெக்டேர் நிலப்பரப்பிலும், நல்ல தண்ணீர் தீவு 110 ஹெக்டேர் நிலப் பரப்பிலும் அமைந்துள்ளது. மேலும் சில தீவுகள் உள்ளன.கண்ணாடி இழையுடன் கூடிய படகுகளை பொதுமக்கள் போக்குவரத்துக்குப் பயன்படுத்தினால் கடலுக்கு அடியில் வாழும் அபூர்வ உயிரினங்களை கண்டு களிக்க முடியும் கரையோரங்களில் உள்ள பவளப்பாறைகளை கண்டு ரசிக்கும் வகையில் அமையும். மேலும் கடல் சார்ந்த சுற்றுலா தளமாக்க அனைத்து வசதிகளும் நிறைந்துள்ளது.இந்த தீவுகளை கண்டு களிக்கும் வகையில் படகு போக்குவரத்து நடத்தப்பட்டால் , சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும். கடல் வளத்தை,மீன் பிடி தொழிலையும் பாதிக்காத வகையில் சில கட்டுப்பாடுகளை விதித்து சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் வகையில் கண்ணாடி இழை படகுகளை இயக்கலாம்.இதனமூலம் சட்ட விரோதமாக தீவுகள் செல்வதும் குறைந்து விடும்.
அவசியமான கோரிக்கை. காலத்தின் கட்டாயம். இளைய தலைமுறையினர்க்கு அவசியமான ஒன்று. சதக் தொழில் கல்லூரி மாணவச் செல்வங்களுக்கு குறிப்பாக கடல் சார்ந்த பட்டப் படிப்புப் பயிலுபவர்களுக்கு அவசியமான ஒன்று. சென்னை சதக் அறக்கட்டளையும் அரசிடம் அவர்களுக்குரிய செல்வாக்கை பயன் படுத்தி இது விஷயத்தில் இணைந்து செயல் பட்டால் சாத்தியமான ஒன்றே.
ReplyDeleteபூனைக்கு மணி கட்டியாகி விட்டது.கோரிக்கை நிறைவேற வேண்டும்.