Monday, May 6, 2013

முக்கிய சாலையில் அபாய பள்ளம் !நடவடிக்கை எடுக்க கோரிக்கை !


கீழக்கரை யில் முக்கிய சாலை ஓரத் தில் உள்ள அபாய பள்ளத் தை மூடவேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழக்கரை பிரதான சாலையான வள்ளல் சீதக்காதி சாலையிலிருந்து தெற்கு மற்றும் மேலத்தெருவுக்கு செல்லும் சாலை உள்ளது. 18வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள இந்த முக்கிய சாலையின் ஓரத்தில் அபாய பள்ளம் ஒன்று உள்ளது.

இந்த சாலை வழியேதான் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும், முதியவர்களும் சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் தவறி விழுந்து காயமடைகின்றனர். பெரிய வாகனங்கள் வந்தால் டூவீலரில் செல்பவர்கள் ஓராமாக ஒதுங்கும்போது பள்ளத்தில் விழும் நிலை உள்ளது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்தில் புகார் கூறினர். அதிகாரிகள் வந்து பார்வையிடுவதுடன் சரி அதை மூடுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து கீழக்கரை நுகர்வோர் பாதுகாப்பு கழக பொருளாளர் செய்யது இபுராகிம் கூறுகையில், 18வது வார்டு கவுன்சிலர் முகைதீன் இபுராகிம் நகராட்சி திட்டப்பணிகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து அவ்வப்போது நகராட்சி கூட்டத்தில் பேசுகிறார். மக்கள் அறியும் வண்ணம் துண்டு பிரசுரங்கள் வழங்குகிறார். இதனால் அந்த வார்டு பகுதியை நகராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் புறக்கணிக்கின்றனர். சாலை ஓரம் உள்ள பள்ளத்தை மூட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அருகிலேயே கழிவு நீர் கால்வாய் செல்வதால் நகராட்சி நிர்வாகம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றார்.

 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.