கீழக்கரை நகராட்சியில் புதிதாக வாங்கப்பட்டுள்ள கழிவு நீர் அகற்றும் லாரி மூலம் சாலைகளில் கழிவு நீர் உறிஞ்சப்பட்டு கால்வாய்களில் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்றும் பணி தொடங்கியது.
இந்த வாகனம் 10 நிமிடத்தில் 6000 லிட்டர் உறிஞ்சும் சக்தி கொண்டது
இது குறித்து நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா கூறியதாவது,இந்த வாகனம் 10 நிமிடத்தில் 6000 லிட்டர் உறிஞ்சும் சக்தி கொண்டது இதன் மூலம் சாலைகளில்,கழிவு நீர் வாய்க்காலில் தேங்கி நிற்கும் நீர் அகற்றப்படும்.மேலும் ஏராளமான வீடுகளில் திடக்கழிவு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.இங்கு தொட்டிகளில் கழிவுநீர் நிரம்பினால் கட்டணம் தரப்பட்டு தனியார் மூலம் அகற்றப்படுகிறது.எனவே தனியார் வீடுகளுக்கும் நகராட்சி மூலம் மக்கள் பயன்பெரும் வகையில் குறைந்த கட்டணத்தில் இதே வாகனத்தை பயன்படுத்தி கழிவு நீர் அகற்றலாமா என்று ஆலோசனை செய்து வருகிறோம்.ஆனால் வாகனம் செல்லும் வசதி உள்ள பகுதிகளில்தான் இதை செயல்படுத்த முடியும்.
வார்டு குறைகளை தீர்ப்பதில் கவுன்சிலர் முகைதீன் இப்ராகிமிற்கு ஆர்வமில்லை
மேலும் 18வது வார்டு உறுப்பினர் முகைதீன் இப்ராஹிம் அவர்களின் வார்டில் கால்வாய் அருகே பள்ளம் இருப்பதாக செய்தி வெளியிட்டிருந்தீர்கள் இது குறித்து நடவடிக்கை எடுத்து சரி செய்யப்படும்.கவுன்சிலர் முஹைதீன் இப்ராஹிம் அவர்கள் கவுன்சிலர் என்ற முறையில் எங்களை தினமும் சந்திக்கும் வாய்ப்பை பெற்றவர் அப்படி இருக்கும் போது நேரிலே வார்டின் குறைகளை சரி செய்ய கூறலாமே? வீண் குற்றச்சாட்டுகளை கூறி வரும் இவர் இது வரை வார்டு மக்களுக்காக எப்போதாவது சேர்மன் என்ற முறையில் என்னிடம் பேசியிருக்கிறாரா?வார்டு குறைகளை தீர்ப்பதில் கவுன்சிலர் முகைதீன் இப்ராகிமிற்கு ஆர்வமில்லை
வார்டு பிரச்சனைகள் இருந்தால் எங்களிடம் எடுத்து வாருங்கள் தீர்வு காணப்பட நடவடிக்கை எடுக்கிறேன்.வீண் குறை கூறி திரிந்தால் பணிகள்தான் பாதிக்கப்படும் என கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் அவர்கள் உணர வேண்டும்.
அது போன்று பேருந்து நிலையம் அருகே வணிக வளாகம் சேதமடைந்து உள்ளதை ஏற்கெனவே பார்வையிட்டு விட்டேன் அதை சீர் படுத்த ரூ 5 லட்சம் செலவில் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.இதை கவுன்சிலர் ஜெயபிரகாஷ் அவர்கள் என்னிடம் கேட்டிருந்தால் விளக்கம் தெரிவித்திருப்பேன் .
தமிழக முதல்வர் புரட்சி தலைவி அவர்களின் நல்லாட்சியில் ஏராளமான நலப்பணிகள் கீழக்கரையில் நடைபெறுகின்றன.மக்கள் பயன் பெறும் வகயில் இன்னும் பல்வேறு நலப்பணிகள் தொடந்து நடைபெறும் என்றார்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.