Thursday, May 16, 2013

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் த‌ர‌ம‌ற்ற‌ ஜென‌ரெட்ட‌ர் வாங்கியுள்ள‌தாக‌ புகார் !




கீழக்கரை நகராட்சியில் கழிவுநீர் பம்பிங் ஸ்டேஷன் 21, 5வது வார்டுகளில் உள்ளன.

இவ்விரண்டிலும் 15 கி.வாட் மின்சாரத்தில் இயங்கும் மின் மோட்டார்கள் உள்ளன மின் தடை ஏற்படும் நேரங்களில் கழிவுநீரை வெளியேற்ற இயலாமல் போகிறது.

இதனால் கழிவுநீர் சாலைகளில் குளம் போல் தேங்கி துர்நாற்றம் வீசியது. இதனால், தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவியது. மின்தடை நேரத்தில் கழிவுநீர் வெளியேற்றும் பணி தொய்வின்றி தொடர பம்பிங் ஸ்டேசனுக்கு ஜெனரேட்டர் வாங்க வேண்டும் என கவுன்சிலர்கள் ஜெயபிரகாஷ், சாகுல்ஹமீது ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து 2 மாதங்களுக்கு முன் ஒரு ஜெனரேட்டர் மட்டும் வாங்கப்பட்டு, 21 வது வார்டில் வைத்து இயக்கப்பட்டது, இந்த ஜெனரேட்டர் தரமற்றது என நகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர் ஜெயபிரகாஷ் புகார் தெரிவித்தார். தரமானதுதான் என நகராட்சித் தலைவர் என கூறினார்.

இதற்கிடையே, புதிய ஜெனரேட்டரின் சேஞ் ஓவர் ஸ்விட்ச் பழுதாகியதால் கடந்த ஒரு வாரமாக கழிவு நீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கழிவுநீர் ரோட்டில் குளம் போல் தேங்கி நிற்கிறது. டெண்டர் கொட்டேஷனில் கிர்லோஸ்கர் நிறுவன ஜெனரேட்டர் ரூ.3 லட்சம் என விலை விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனரேட்டர் விநியோக டெண்டர் எடுத்த கான்ட்ராக்டர் வேறு தரமான நிறுவன பெயர் ஸ்டிக்கரை ஒட்டி சீன தயாரிப்பு ஜெனரேட்டரை சப்ளை செய்துள்ளார். ஜெனரேட்டரின் வாங்க கொட்டேஷன் வாங்கியதில் ரூ.1.85 லட்சம்தான் என தெரிய வந்துள்ள‌தாக‌வும், ஜெனரேட்டரை ஆய்வு செய்த பிறகு அதற்குரிய பணம் வழங்கவும், மேலும் 2 ஜெனரேட்டரை தரமான நிறுவனத்திடமிருந்து வாங்க வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


கவுன்சிலர் ஜெயபிரகாஷ் கூறுகையில்,
மக்களின் வரிப்பணத்தில் வாங்கிய ஜெனரேட்டரில் முறைகேடு நடந்துள்ளது. தரமான நிறுவன ஜெனரேட்டருக்குரிய தொகையைப் பெற்றுக்கொண்டு சீன தயாரிப்பை வைத்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். 2 மாதத்தில் பழுதாகிய ஜெனரேட்டர் விவகாரத்தில் அதிகாரிகள் மழுப்பலாக பதில் கூறுகின்றனர் .இது குறித்து க‌மிஷ‌ன‌ரருக்கு புகார் செய்ய‌ போன் செய்தால் போனை எடுப்ப‌தில்லை பொறுப்பான‌ அதிகாரி இது போன்று இருந்தால் எப்ப‌டி குறைக‌ளை தீர்க்க‌ முடியும் ? என்றார்.

இது குறித்து ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் க‌த‌ரியாவிட‌ம் கேட்ட‌ போது,

எவ்வித‌ முறைகேடு ந‌டைபெற‌வில்லை.சைனா தயாரிப்பு என்பெதெல்லாம் பொய் இந்திய‌ த‌யாரிப்பு ஜென‌ரெட்ட‌ர்தான்.ஜென‌ரெட்ட‌ர் ப‌ழுதான‌து குறித்து நிறுவ‌ன‌த்திட‌ம் புகார் தெரிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.அந்த‌ நிறுவ‌ன‌த்தின‌ர் ச‌ரி செய்வார்க‌ள்.மேலும் ஒரு வ‌ருட‌ம் வார‌ண்டி உள்ள‌து.உண்மை நிலை இப்ப‌டி இருக்கும் போது க‌வுன்சில‌ர் ஜெய‌பிர‌காஷ் ஏன் இது போன்ற‌ குற்ற‌ச்சாட்டுக‌ளை கூறுகிறார் என்று தெரிய‌வில்லை என்றார்
 

3 comments:

  1. அன்புடன் கீழக்கரை டைம்ஸ்க்கு,
    அமானிதத்தை உண்ண ஆசைப்படுபவன், பொதுப் பணத்துல தானும் உண்டு உடல் வளர்த்து தன்னோட வாரிசுக்கும் சேர்க்க நினைப்பவன் மற்றும் பொதுச் சொத்துக்கு ஆசைப்படுபவனுக்கெல்லாம் மறுமையிலே எப்படிப்பட்ட தண்டனை கொடுக்கப்படும் என்பது பற்றிய ஹதீஸ் விளக்கங்களையும் அவ்வப்போது வெளியிட்டீங்கன்னா நன்றாக இருக்கும். பொதுவா துனியா சந்தோசத்தைத் தான் பெரும் சந்தோசமா நிறையப்பேர் நினைத்து வாழ்கிறார்கள். அல்லாஹ் போதுமானவன்.....

    ReplyDelete
    Replies
    1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்May 17, 2013 at 6:30 PM

      முஸ்லீம் குடி மக்களின் நிர்வாகப் பொருப்பை ஏற்கும் ஒருவர், அவர்களுக்கு மோசடி செய்த நிலையில் இறந்து விடுவாரேயானால் சொர்க்கத்தை அவர்களுக்கு தடை செய்து விடுகிறான்..

      கூறியவர்: இறை தூதர் (ஸல்)
      அறிவிப்பவர்: ஹஸன் அல்பசிரி (ரஹ்)
      ஆதாரம்: சஹிஹ் புஹாரி, வால்யும்:7, புக்:93 எண்:7151

      Delete
  2. மங்காத்தாவின் தங்கச்சி மகன்May 17, 2013 at 7:52 PM

    மக்கள் பிரதிநிதி சகோதரர் ஜெய பிரகாஷ் (வார்டு 21) அவர்களின் கனிவான பார்வைக்கு:இது சம்பந்தமாக எழுத்து பூர்வமாக புகார் அளித்தீர்களா? மனுவை பெற்று கொண்டதற்கு நகநாட்சி அலுவலக முத்திரை உள்ளதா?

    அது சரி மக்கள் வரி பணத்தில் லட்ச கணக்கில் செலவழித்து வாங்கிய ஜெனரேட்டர், மேடை அமைத்து வைக்காமல் மண் தரையில் வைக்கப்படுட்டுள்ளதை நீங்கள் கவனிக்க வில்லையா? இதனால் அடிப்பாகம் துருப்பிடித்து சாதனம் வீணாக வழி வகுக்காதா எனபதை கவனதில் கொள்ள வில்லையா? ஒரு சமயம் வேறு இடத்திற்கு எடுத்து செல்லும் சூழ்நிலை இருக்குமானால் மரத்தினால் மேடை அமைத்து வைக்கலாமே?

    என்னமோ போங்கள். உங்களுக்குள் தர்க்கம் பண்ணிக் கொண்டு இருக்கத்தான் நேரம் இருக்கிறது. மக்கள் நலம் பேணுவதில் அறவே நாட்டம் இருப்பதாக தெரியவில்லை. மக்கள் வரி பணத்திலிருந்து அரசு தரப்பில் இதற்கு முன் இல்லாத அளவுக்கு கோடிக் கணக்கில் பணம வந்தும் மக்கள் நலம் முழுமையாக பேண நாதி இலலை.ஓட்டு போட்ட கீழக்கரை வாழ் பொது மக்களுக்கு என்ன சாபமோ புரியவில்லை.படைத்தவனே!!!

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.