கீழக்கரை காஞ்சிரங்குடி அருகில் குளிர் பானம் ஏற்றி வந்த லாரியின் பின் பக்க டயர் வெடித்து நிலைதடுமாறி தலை குப்புற கவிழ்ந்து குளிர் பானங்கள் நடுரோட்டில் சிதறியதால் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
தேவிபட்டிணத்திலிருந்து கீழக்கரைக்கு குளிர் பான லாரி ஒன்றை தேவிப்பட்டிணத்தை சேர்ந்த டிரைவர் வெங்கடேஷ்)24) ஓட்டி வந்தார்.உடன் சேல்ஸ் மேன் முத்துகுமார் என்பவரும் வந்துள்ளார்.ககாஞ்சிரங்குடி பஸ் ஸ்டாப் அருகில் வரும் போது பின் பக்க டயர் வெடித்து நிலை தடுமாறிய லாரி தலைகுப்புற கவிழ்ந்ததாக அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.இருவரும் காயமின்றி தப்பினர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.