Monday, May 6, 2013

சேதமடைந்த நிலையில் நகராட்சி வணிக வளாகம்! சீரமைக்க கோரிக்கை !


கீழக்கரை நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ளது .இங்கு 30 கடைகள் உள்ளன .கடைகளில் அடிக்கடி  சிமெண்ட் சிலாப்புகள் பெயர்ந்து விழுகின்றன .இதனால் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது .

ஏற்கெனவே சிலாப்பு இடிந்து மீன் விற்கும் தொழிலாளி ஒருவர் காயமடைந்துள்ளார் எனவே பெரிய ஆபத்துக்கள் நிகழும் முன்  நகராட்சி நிர்வாகம் இதை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி கவுன்சிலர் ஜெயபிரகாஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

1 comment:

  1. நியாமான கோரிக்கை, நண்பர் ஜெயப்ரகாஷ் அப்பகுதி கவுன்சிலர் என்கிற முறையில் மட்டுமல்ல நமது கீழை மக்கள் பெரும்பாலோர் வந்து போகக் கூடிய இடம், அதனால் வீணான தொந்தரவுக்கு பொதுமக்கள் ஆளாக வேண்டாமே என்கிற எண்ணத்தோடும் இந்த கோரிக்கையை முன் வைத்திருக்கிறார். நகராட்சி நிர்வாகம் என்ன வேகம் காட்டுகிறது என்பதையும் பார்ப்போமே!

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.