கீழக்கரை சாலையோரம் சுற்றிதிரியும் மாடுகளால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு இருப்பதாக எழுந்த புகாரின் பேரில் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிந்தால் நகராட்சி ஊழியர்கள் மூலம் பிடிக்கப்பட்டு மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கீழக்கரை சாலையில் நீண்ட நாட்களாக சுற்றி திரிந்த கன்று ஒன்றை சுகாதார ஆய்வாளர் தலைமையிலான நகராட்சி குழுவினரால் பிடிக்கப்பட்டு நகராட்சி அலுவலக வளாகத்தில் ஒரு வாரமாக பராமரிப்பு செய்து வைத்திருந்தனர்.
யாரும் இக்கன்றுக்கு உரிமை கோர முன் வராததால் நகராட்சி நிர்வாகம் மூலம் தலைவர் ராவியத்துல் காதரியா,கமிஷனர் முஹம்மது முகைதீன்,துணை தலைவர் ஹாஜா முஹைதீன், ஆகியோர் முன்னிலையில் மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்தவரிடம் இக்கன்று ஒப்படைக்கப்பட்டது.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.