Sunday, January 1, 2012

பல்லாண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக ஹமீதியா முன்னாள் மாணவர்கள் கூட்டம்!




நேற்று மாலை கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல் முறையாக முன்னாள் மாணவர்கள் கூட்டம் நடைபெற்றது. இப்பள்ளி 1933ல் தொடங்கப்பட்டதாக கூட்டத்தில் பேசியோர் தகவல் வெளியிட்டனர்.
70வயதுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பள்ளியில் படித்த பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
இப்பள்ளியின் முன்னாள் மாணவர்களான சதக் டிரஸ்ட் சேர்மன் ஹமீது அப்துல் காதர்,தைக்கா சுஐபு ஆலிம்,ஈடிஏ இயக்குநர் ஸலாஹீதீன், பள்ளி தாளாளர் யூசுப் சாகிப் ,அஹமது ஹுசைன்,சதக் அப்துல் காதர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இது போன்ற முன்னாள் மாணவர் சங்க கூட்டம் நடைபெறும் தகவல் ஏராளமானோருக்கு தெரியவில்லை அடுத்த முறை அனைவருக்கும் இந்த செய்தி தெரியப்படுத்த வேண்டும் என்று கூட்டத்தில் பேசியோர் தெரிவித்தனர்.மேலும் இந்த் சங்கத்தின் கிளைகள் வெளிநாடுகளிலும் துவங்கப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

பள்ளி முன்னேற்றத்திற்க்காக பலரும் நன்கொடைகளை அறிவித்தனர்.

பள்ளியின் பழைய நினைவுகளை ஞாபக படுத்தும் விதமாக பள்ளியின் இரும்பு கம்பியால் மணி ஒலி எழுப்பப்டட்டு நிகழ்ச்சி துவங்கப்பட்டது .

நிகழ்ச்சி ஏறபாடுகளை உஸ்வதுல் ஹசனா நிர்வாகத்தின் சார்பில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹசன் இப்ராகிம் மற்றும் சதக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் ஆகியோர் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.