Saturday, March 3, 2012

புதிய நான்கு வழி சாலை!மதுரை - ராமநாதபுரத்திற்கு ஒரு மணி நேரத்தில் செல்ல வாய்ப்பு !


ரூ. 828 கோடி செலவில் மதுரை & ராமநாதபுரம் இடையே என்எச் 49&ஐ நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்த மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. 30 மாதங்களில் இத்திட்டத் தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. திட்டம் நிறைவேறினால் ஒரு மணிநேரத்தில் பயண தூரத்தைக் கடக்கலாம்.

மதுரை & ராமநாதபுரம் இடையே நான்குவழிச்சாலை அமைக்க கடந்த 2006ல் திட்டமிடப்பட் டு சர்வே பணிகள் நடந்தாலும், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்காமல் இருந்தது. இந்நிலையில் 115 கிமீ தூரமுள்ள மதுரை & ராமநாதபுரம் இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலை எண் 49&ஐ, ரூ. 828.07 கோடி செலவில் நான்குவழிச்சாலையாக தரம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இரண்டரை ஆண்டு காலத்தில், அதாவது 30 மாதங்களில் இத்திட்டத்தை நிறைவு செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து சிலைமான், திருப்புவனம், மானாமதுரை, சிவகங்கை, பரமக்குடி வழியாக ராமநாதபுரத்திற்கு நான்குவழிச்சாலை அமைக்கப்படவுள்ளது. தற்போது என்எச்&49ல் மதுரையிலிருந்து ராமநாதபுரத்திற்கு சாதாரண பஸ்களில் 2.30 மணி நேரமும், விரைவு பஸ்களில் 2 மணிநேரமும், நான்&ஸ்டாப் பஸ்களில் 1.50 மணி நேரமும் பயண நேரமாக உள்ளது.

நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டால் இந்த பயண நேரம் 1 மணி நேரமாக குறையும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்தார். ந‌ன்றி :தின‌க‌ர‌ன்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.