Wednesday, August 15, 2012

கீழக்கரையில் பிச்சை எடுக்க சிறுவர்,சிறுமிகளை அழைத்து வரும் கும்பல்!


கீழக்கரை முக்கிய சாலையில் அமைந்துள்ள கடையில்..

ரமழான் மாதம் தொடங்கிய சில நாட்களில் கீழக்கரை முழுவதும் வெளியூரிலிந்து அடையாளம் தெரியாத கும்பலால் அழைத்து வரப்பட்டு கடந்த சில வாரங்களாக ஏராளமான வெளியூர் சிறுவர் ,சிறுமிகள் பிச்சை எடுத்து வருகின்றனர்.மிகவும் சோர்ந்து பரிதாப நிலையில் உள்ள இக்குழந்தைகள் தெருக்களில் உள்ள வீடுகள், கடைகள் ஆகிய இடங்களில் பிச்சை எடுக்கின்றனர். கூட்டம் கூட்டமாக குழந்தைகளை அழைத்து வரும் இக்கும்பல் ஒவ்வொரு பகுதிக்கும் 2,3குழந்தைகள் வீதம் பிச்சை எடுக்க வைக்கிறார்கள்.



இது குறித்து சமூக ஆர்வலர் முஜிப் கூறுகையில்,

பிச்சை எடுக்க வெளீயூரிலிருந்து சிறுவர்,சிறுமிகள் வேன்,மற்றும் பஸ்களில் அழைத்து வரப்படுகிறார்கள்.பின்னர் அவர்கள் வேறு ஒரு பகுதிக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்.ரமலான் மாதத்தில் நமதூரை சேர்ந்த சில செல்வந்ததர்கள் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு 10 ரூபாய் நோட்டு கரன்சி தாள்களை பித்ரா என்ற பெயரில் விநியோகம் செய்கிறார்கள்.இது போன்ற செயல்கள் பிச்சை எடுக்க வைக்கு கும்பலுக்கு வசதியாக போய் விடுகிறது.

குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கும் கும்பல் இது போன்று பித்ரா விநியோகிக்கும் இடங்களுக்கு ஏராளமான வெளியூரிலிருந்து வரவைக்கப்பட்ட‌ குழந்தைகளை அனுப்பி அங்கு பிச்சை எடுக்க வைக்கிறார்கள்.எனவே தங்களுடைய பித்ராவை சரியான முறையில் திட்டமிட்டு ஏழை எளியவர்களில் வாழ்வு செழிப்பதற்கு கொடுத்து உதவ வேண்டும்.இதன் மூலம் அப்பாவி குழந்தைகள் பாதிக்கப்படுவதையும் தடுக்கலாம்.


No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.