Saturday, January 14, 2012

காவல் நிலையத்தில் நகராட்சி தலைவர் -துணை தலைவர் கோரிக்கை மனு!


நகராட்சி தலைவர் மனு!

நகராட்சி துணை தலைவர் மனு!

கீழக்கரை காவல் நிலையத்தில் இன்று பொதுமக்கள் குறை தீர்க்கும் விதமாக மனு பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. டிஎஸ்பி முனியப்பன் தலைமையில் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் உள்ளிட்ட காவல்துறையினர் மனுக்களை பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா மற்றும் நகராட்சி துணை தலைவர் ஹாஜா முகைதீன் ஆகியோர், "கீழக்கரை பேருந்து நிலையத்தில் சமூக விரோத செயல்களை தடுக்கும் விதமாக புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை தனி ,தனியாக காவல் துறைக்கு கோரிக்கை மனு அளித்தனர்.

ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ம‌ற்றும் துணை த‌லைவ‌ர் இருவ‌ரும் புற‌க்காவ‌ல் நிலைய‌ம் அமைக்க‌ வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை தனி,தனியாக சென்று மனு கொடுத்தற்கு ப‌திலாக‌ இருவரும் ஒரே ம‌னுவாக‌ கொடுத்திருக்கலாம் இது போன்ற‌ ஊர் ந‌லன் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ விச‌ய‌ங்க‌ளில் இருத‌ர‌ப்பும் கலந்து பேசி இணைந்து செயல்ப‌ட‌ வேண்டும்.

ஊரின் ந‌லனை கருத்தில் கொண்டு அனைத்து நிக‌ழ்வுக‌ளிலும் இருத‌ரப்பும் ஒற்றுமையாக‌ செய‌ல்ப‌டுவ‌து கீழ‌க்க‌ரையின் வ‌ள‌ர்ச்சிக்கு உத‌வும்.இதுவே கீழக்கரை ம‌‌க்க‌ளின் எதிர்பார்ப்பாக‌ உள்ள‌து.

2 comments:

  1. எல்லாம் சரி தன ..போன பெருநாளைக்கு மின்சாரம் ஐந்து மணி நேரம் பிடிகபட்டது அதே போல் பொங்கலுக்கு ஒரு நிமிடம் கூட மின்சாரம் போக வில்லை... ஜனநாயகம் ஹஹா

    ReplyDelete
  2. இவர்கள் பிரிந்திருப்பதே மக்கள் பணத்துக்கு பாதுகாப்பு

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.