Monday, January 2, 2012
துப்புரவு செய்பவர்களே குப்பையை சாலையில் குவிக்கும் அவலம் !
பிரபுக்கள் தெரு அருகே சாலையில் குவிந்துள்ள குப்பைகள்
துப்புரவு பணியாளர்களே குப்பையை கொட்டி செல்வதாக சுட்டிகாட்டும் கலீல்,காசிம் மற்றும் சுலைமான்
கழிவு நீர் கால்வாயில் குப்பைகள் நிறைந்து கழிவு நீர் செல்ல முடியாத நிலை இருப்பதாக கலீல் சுட்டி காட்டுகிறார்.
கீழக்கரை பழைய பேருந்து நிலையம் செல்லும் வழியில் சாலை ஓரத்தில் ஏராளமான குப்பைகள் குவிந்துள்ளது இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதனால் வாகன ஓட்டிகள் உள்பட அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். மேலும் துப்புரவு பணியாளர்களே சாலை ஓரத்தில் குப்பைகளை குவித்து வைத்து அள்ளாமல் சென்று விடுவதாக அப்பகுதியில் உள்ளவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த காசிம்,கலீல் மற்றும் சுலைமான் கூறுகையில் ,இப்பகுதியில் நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது.மேலும் துப்புரவு பணியாளர்கள் மற்ற பகுதிகளில் உள்ள குப்பைகளை எடுத்து வந்து இப்பகுதியில் குவித்து விட்டு அகற்றாமல் சென்று விடுகிறார்கள்.அகற்றப்படும் குப்பைகளை டிராக்டரில்தான் கொட்ட வேண்டும் துப்புரவு செய்ய வேண்டிய பணியாளர்கள் ஏன் சாலையில் கொட்டி செல்ல வேண்டும். உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும்.நடவடிக்கை காலதாமதமானால் சாலை முழுவதும் குப்பைகள் நிறைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்றனர்.
இது குறித்து நகராட்சி தலைவரிடம் கேட்ட போது,பல் வேறு இடங்களில் தொடர்ந்து குப்பைகளை அகற்றி வருகிறோம்.இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்கிறேன் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteஇன்றைய சூழலில் பயன்தரத்தக்க கட்டுரை இது...பதிவு நல்லா இருந்தது....முயற்சி தொடரட்டும்,உண்மையை சொல்லும் வித்தியாசமான கட்டுரை,எங்க தளத்திற்கும் நீங்க வாங்க...தளத்தில் உறுபினராக ஆகுங்கள்
www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் ......உங்களையெல்லாம் திருத்தவே முடியாது!,நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-3), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..இன்னும் பல. அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....