Monday, January 2, 2012

கீழக்கரையில் லிபியாவின் ஆலிவ் செடிகள் !விவாசாயத்துறையினர் பாராட்டு!


பட விளக்கம் : 5 அடிக்கும் மேல் வளர்ந்துள்ள ஆலிவ் செடியுடன் செல்லாப்பா


கீழக்கரை நடுத்தெருவை சேர்ந்தவர் செல்லாப்பா தோட்ட‌க‌லையில்ஆர்வமுடையவர் .இவருடைய தோட்டம் கீழக்கரை அருகே மாலக்குண்டு பகுதியில்அமைந்துள்ளது .இவர் தொழில் நிமித்தமாக அடிக்கடி லிபியாபோன்ற வெளிநாடுகளுக்கு சென்று வருவார்.ஒவ்வொருமுறையும் லிபியா சென்று ஏதாவது ஒரு மரசெடியை வாங்கி வருவாராம்.இந்நிலையில் லிபியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட ம‌ருத்துவ‌ குண‌ம் ப‌டைத்த‌ 5 ஆலிவ் செடிகளை தனதுதோட்டத்தில் வளர்த்து வருகிறார்.மேலும் ஜெர்மனியிலிருந்து கொண்டுவரப்பட்ட எலுமிச்சை செடிகளை அங்கு வளர்த்து வருகிறார்.இன்னும் பல்வேறுவகையான மரங்களை தன்னுடைய தோட்டத்தில் வளர்த்து வருகிறார். வெளிநாடுகளில்மட்டுமே காணக்கூடிய செடிகள் இவருடைய தோட்டத்தில் இருப்பதால் ஏராளமானோர்அதை காண வருகின்றன‌ர்.

இது குறித்து விவாசாய‌த்துறை அதிகாரி க‌மாலுதீன் கூறுகையில்,
இவ்வ‌கை ஆலிவ் ம‌ர‌ங்க‌ள் குளிர்ச்சியான சீதோசனம் உள்ள நாடுகளில்தான் பூபூத்து காய் காய்க்கும்.நமது ப‌குதிக‌ளில் ஆலிவ் மரம் வ‌ள‌ர்ச்சி இருக்குமே த‌விர‌ காய்க்காது.மேலும் இப் ப‌குதியில் மா,பழா,வாழை போன்ற‌ம‌ர‌ங்க‌ளே ப‌ல‌னை த‌ரும் மேலும் சமீப காலமாக மரங்கள் குறைந்து வரும் நிலையில் இது போன்று மரங்களை வளர்க்கும் இவர் பாராட்டுக்குறிய‌வர் விரைவில் நான் நேரில் சென்று பார்வையிட உள்ளேன்.மக்களுக்கு இயற்கை மீது ஆர்வம் அதிகரிக்க இது போன்ற செயல்கள் ஊக்கப்படுத்தும் என்றார்.

இது குறித்து செல்லாப்பா கூறுகையில் , என‌க்கு சிறு வ‌ய‌திலேயேதோட்ட‌க்க‌லை மீது ஆர்வ‌முண்டு என‌வே நான் ஒவ்வொரு முறை வெளிநாடு சென்றுவ‌ரும்போது ஏதாவ‌து ஒரு செடியை வாங்கி வ‌ருவேன். 3ஆண்டுக‌ளுக்கு முன் ஆலிவ் செடியை இங்கு ப‌யிரிட்டேன் எதிர்பார்த்த‌தை விட‌ந‌ன்றாக‌ வ‌ள‌ர்ச்சிய‌டைந்துள்ள‌து.லிபியாவை சேர்ந்த‌ என்னுடைய‌ ந‌ண்ப‌ன்அஷ்ரபுக்கு ம‌ர‌த்தின் வ‌ள‌ர்ச்சியை புகைப‌ட‌மாக‌ அனுப்பினேன் அவ‌ர்மிக‌வும் ஆச்ச‌ரிய‌ப்ப‌ட்டார்.இவ்வகை ம‌ர‌ங்க‌ளை வ‌ள‌ர்ப்ப‌து ம‌ன‌திற்குமிக‌வும் ம‌கிழ்ச்சிய‌ளிக்கிற‌து என்றார்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.