கீழக்கரை அத்திலை தெரு பகுதியில் மின்கம்பங்கள் கீழே விழும் நிலையிலும் ,வயர்கள் அறுந்து விழும் நிலையில் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக புகார் அளித்து வந்தனர்.
நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா மின்சாரதுறையிடம் இது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
இதனையடுத்து மின் துறை உயர் அதிகாரி பாண்டியன் அத்திலை தெருவில் பாதிப்படைந்த மின்கம்பங்களை பார்வையிட்டார் .நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா உள்பட மின் துறை அதிகாரிகள் உடன் சென்றனர்.
அப்பகுதியை சேர்ந்த சமதானி உள்ளிட்ட இளைஞர்கள் கூறுகையில் ,
இந்த கம்பங்கள் எப்போது வேண்டுமானலும் கீழே விழலாம்.வீடுகள்தான மின் கம்பங்களை தாங்கி நிற்கிறது.மேலும் புதிய வயர்கள் மாற்றுவதற்கு நாங்கள் மின்சார துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளோம் என்றார்கள்.
இது குறித்து மின் துறை அதிகாரி கூறுகையில் ,
இப்பகுதியில் புதிய வயர்கள் மாற்றப்பட்டு பாதிப்படைந்த மின் கம்பங்கள் இப்பகுதி மக்கள் ஒத்துழைப்புடன் சரி செய்யப்படும் என்றார்.
In whole kilakarai so many places its like that not only in athilai street.
ReplyDeleteIn whole kilakarai so many places electric post are like this not only in athilai street.
ReplyDelete