Wednesday, January 4, 2012

கீழக்கரைக்கு முக்கியத்துவம் அளித்த அமைச்சர்கள்!நகராட்சி தலைவர் தகவல் !















கீழக்கரை நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா சில நாட்களுக்கு முன் சென்னை சென்று தமிழக‌ அமைச்சர்களை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தார்.

அமைச்சர் பழனிச்சாமி,அமைச்சர் விஜய்,அமைச்சர் செங்கோட்டையன்,அமைச்சர் கோகுல் இந்திரா ,அமைச்சர் முனுசாமி உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களை சந்தித்து கீழக்கரைக்கு தேவைபடும் நல்ப்பணிகள் குறித்து கோரிக்கை வைத்தார்.நெடுஞ்சாலை அமைப்பது,புதிய கமிஷனர் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக அமைச்சர்கள் உறுதி அளித்ததாக நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா கூறினார்.


மேலும் அவர் கூறுகையில், மூன்று நாட்களில் இத்தனை அமைச்சர்களையும் சந்திப்பது சற்று சிரமம்தான் ஆனால் கீழக்கரை நகராட்சியின் பிரதிநிதி என்ற அடிப்படையில் அனைத்து அமைச்சர்களும் நமக்கு சந்திப்பதற்கு முன்னுரிமை அளித்து கீழக்கரை நலனுக்கான கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளனர்.தமிழக் முதல்வர் அவர்களின் நல்லாட்சியில் கீழக்கரைக்கான நல‌திட்டங்கள் அனைத்தும் சிறப்பு கவனத்துடன் விரைந்து நடைபெறும் என்றார்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.