Wednesday, January 25, 2012

இரண்டாவது முறையாக அதே தேதியில் நகைகளை கொள்ளையடித்த கும்பல்!2பேர் கைது


வெளிநாட்டிலிருந்து திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊரான கீழக்கரை வந்திருந்த மேலத்தெருவை சேர்ந்த‌ தொழில் அதிபர் முகம்மது அலி(30) என்பவர் வீட்டில் கடந்த ஜனவரி 3ம்தேதி(2012) கைபையில் வைத்திருந்த 38 பவுன் உள்பட ரூ15 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளைய‌டிக்கப்பட்டன. இது தொடர்பாக எஸ்.பி காளிராஜன் மகேஷ்குமார் உத்தரவின் பேரில் கீழக்கரை டி.எஸ்.பி முனியப்பன் தலைமையில் இன்ஸ்பெக்டர் இளங்கோவன்,எஸ்.ஐ கனேசன் மற்றும் டிஎஸ்பி முனியப்பன் தலைமையில் காவல்துறை தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.


இந்நிலையில் கொள்ளைக்கு உதவியாக இருந்ததாக‌ ஏர்வாடியை சேர்ந்த சிக்கந்தர் மகன் நசுருதீன் என்பவரை நேற்று முன் தினம் போலீசார் கைது செய்தனர் .

அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த 2011ம் ஆண்டு இதே ஜனவரி 3ம் தேதி திருமண விழாவில் கலந்து கொள்ள கீழக்கரை வந்திருந்த‌ மேலத்தெருவை சேர்ந்த முஜம்மில் என்பவர் வீட்டில் 115 பவுன் மற்றும் 5.75 லட்சம் ரொக்கம் திருடியவர்கள் இந்த திருட்டிலும் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பது தெரிவ வந்தது.குறிப்பாக ஏற்கெனவே கீழக்கரையில் சென்ற வருடம் திருடியதாக கைது செய்யப்பட்ட மாயாகுளம் பள்ளி வாசல் தெரு ஹாஜா நஜிமுதீன் மகன் சேக் அலாவுதீன்(25) சம்பந்தப்பட்டிருப்பதாக‌ தெரிய வந்ததால் போலீசார் அவரை கைது செய்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த திருட்டு குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரண்டு திருட்டுக்களுமே ஒரே தேதியில் அவர்கள் வெளிநாடு பயணம் புறப்பட தயாராக இருந்த போது நடத்தப்பட்டது என்பது குறிப்பிடதக்கது

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.