பெரும்பாலான நேரம் ஆளில்லா கமிசனர் அலுவலகம்
பணி நேரத்தில் ...விடுமுறை தினமா என்று நினைக்க தோன்றும் அலுவலகம்
ஒருவர் மட்டும் பணியில் .....தனிகாட்டு ராஜா...
கீழக்கரை நகராட்சி நாளொன்று ஏராளமான மக்கள் பல் வேறு பணிகளுக்காக நகராட்சி அலுவலகத்துக்கு வருகை தருகின்றனர்.ஆனால் பணி நேரத்தில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அலுவலகத்தில் இருப்பதில்லை இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக 18வது வார்டு கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் மற்றும் 20வது வார்டு கவுன்சிலர் இடி மின்னல் ஹாஜா உள்ளிட்டோர் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் கூறியதாவது,
கீழக்கரை நகராட்சி பணி நேரத்தில் அலுவலகத்தில் பெரும்பாலான ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இருப்பதில்லை இவர்கள் இருக்கைகள் காலியாகவே உள்ளது ஒரு சிலர் மட்டும் பணியில் உள்ளனர் என்று பொது மக்கள் புகார் கூறி வருகின்றனர்.இன்று நான் மற்றும் கவுன்சிலர் ஹாஜா ஆகியோர் நகராட்சி அலுவலகம் வந்து பொதுமக்கள் குற்றச்சாட்டு உண்மை என்பதை நேரடியாக உணர்ந்தோம்.
இது போன்ற நிலைமை நீடித்தால் ஏராளமான பொதுமக்கள் தங்களின் குறைகளை நிறை செய்ய முடியாமல் பெரும் துன்பத்துக்குள்ளாவார்கள் என்பதை பணி நேரத்தில் அலுலவலகத்துக்கு வராதவர்கள் உணர வேண்டும்.மேலும் கீழக்கரைக்கு இது வரை கமிசனர் நியமிக்கப்படவில்லை கூடுதல் பொறுப்பாக கீழக்கரையையும் சேர்த்து கமிசனர் முஜிபுர் ரஹ்மான் கவனித்து வருகிறார்.அவரால் கீழக்கரை அலுவலகத்துக்கு வர முடிவதில்லை இதனால் கமிசனர் அலுவலகம் பூட்டியே உள்ளது.எனவே உடனடியாக நகராட்சி கமிஷனர் நியமிக்க வேண்டும் இது குறித்து நான் சம்பந்தப்பட்டவர்களுக்கு மனு அனுப்பியுள்ளேன் என்றார்.
இது குறித்து காலையிலிருந்து நகராட்சியில் வீடு சம்பந்தமாக சான்றிதழ் பெற்று செல்ல காத்திருந்த அசாருதீன் என்பவர் கூறியதாவது,
ஏதோ விடுமுறை தினத்தில் அலுவலகம் வந்து விட்டோமோ என்று நினைத்தேன்.டீ குடிக்க சென்றாலும் சிறிது நேரத்தில் திரும்பி விடலாம் ஆனால் பல மணி நேரமாக ஊழியர்கள் வரவில்லை. ஒரு வேளை வெளியே சொந்தமாக தொழில் செய்கிறார்களோ என்று எண்ண தோன்றுகிறது.இவர்களை கண்காணிக்க வேண்டிய உயர் அதிகாரியான கமிசனரும் அலுவலகம் வருவதில்லை. பணிகள் குறித்த அரசின் விதிமுறைகளை இவர்கள் கடைபிடிப்பதில்லை எனவே உரியவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இது குறித்து பணி நிமித்தமாக சென்னை சென்றுள்ள நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியாவிடம் கேட்ட போது ,
இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்து உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.