Wednesday, January 4, 2012

இணையதளம் மற்றும் செல்போனில் தொந்தரவு!காவல்துறை அதிகாரி எச்சரிக்கை !


இன்ஸ்பெக்ட‌ர் இள‌ங்கோவ‌ன்

இன்று உலகம் பேஸ்புக்,டிவிட்டர் போன்ற சமுக இணைய‌தளங்கள் உலகெங்கும் பிரபலமடைந்து உள்ளது அதில் பட்டி தொட்டிகளும் விதிவிலக்கல்ல. இந்நிலையில் பிரபலங்களின் பெயர்களில் போலியான கணக்கை பேஸ் புக் ,டிவிட்டர் பெயர்களின் உருவாக்கி சர்ச்சைகள் ஏற்படுத்தியது அனைவரும் அறிந்ததே.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பலர் இது போன்ற‌ செய‌ல்க‌ளால் பாதிக்க‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ கூறப்ப‌டுகிற‌து.
சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் மற்றும் புகைபடங்களை உபயோகித்து அவர்களுக்கு தெரியாமலே சமூக வலைதளங்களில் போலி ஐடிக்களை விஷமிகள் உருவாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.இதன் மூலம் தங்களின் அந்தரங்கங்களையும் ,தவறான தகவல்களையும் வெளியிடுவதாக மனம் குமுறுகின்றனர் மேலும் சிலர் பெண்களுக்கு செல்போன் மூலம் ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்புவது.ஆபாசமாக பேசுவது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் இது தொட‌ர்பான குற்றங்களை தடுப்பதற்கு சைப‌ர் கிரைம் பிரிவு சென்னை,மதுரை போன்ற பெருநகரங்களில்தான் உள்ளது எனவே சைபர் கிரைம் பிரிவை மாவட்ட தலைநகரான‌ ராம‌நாத‌புர‌த்தில் தொட‌ங்கி சிறு ந‌க‌ர‌ங்க‌ளில் அதன் கிளைக‌ளை தொடங்கி நடவடிக்கை எடுக்க‌ வேண்டும் என்று பொதும‌க்க‌ள் கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்.


இது குறித்து முஜீப் கூறியதாவது, என்னுடைய பெயர் மற்றும் போட்டோவுடன் சமூக‌ இணையதளத்தில் பல தவறான தகவல்களை பதிவு செய்திருந்தார்கள்.நண்பர்கள் பலர் எனக்கு போன் செய்து கேட்ட பிறகுதான் எனக்கு தெரிய வந்து மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது.உடனடியாக தவறான தகவல்களை நீக்கி விட்டேன் மேலும் இது தொடர்பான குற்றங்கள் குறித்து காவல்துறையிடம் புகார் செய்ய உள்ளேன் என்றார்.

அசாருதீன்‌ என்ப‌வ்ர் கூறுகையில் ,
ஒரு சில‌ குடும்ப பெண்களின் புகைபடங்களை இணைத்து அவர்களின் பெயர்களில் போலி ஐடிக்கள் உருவாக்கி அவர்களில் அந்தரங்கஙகளை பற்றிய தவறான தகவல்கள் தரப்பட்டுள்ளது.இதன் மூலம் பலருடைய குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.பாதிக்கப்பட்டவர்கள் நான் உள்பட பலரும் வெளியே சொல்வதற்கு தயங்குவதாலும்,எப்படி தடுப்பது என்று தெரியாத‌தாலும் விசமிகளுக்கு வாய்ப்பாக உள்ளது.இந்த செயலை தடுத்து நிறுத்தி இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ஹாசிம் என்ப‌வ‌ர் கூறுகையில் , செல்போன் மூல‌ம் ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்புவது,பேசுவது என்று பெண்களுக்கு தொந்த‌ர‌வு செய்வோர் அதிகரித்து வருகிறது இவர்கள் மீது க‌டும் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என்றார்.

இது குறித்து கீழக்கரை காவல்துறை இன்ஸ்பெக்டர் இளங்கோவன் கூறுகையில்,
இது தொடர்பாக இதுவரை புகார்கள் எதுவும் வரவில்லை மேலும் இது போன்ற‌ செய‌ல்க‌ளில் ஈடுப‌டுப‌வ‌ர்க‌ள் மீது க‌டும் ந‌ட‌வ‌டிக்கை எடுக்கப்ப‌டும். இது தொட‌ர்பான‌ புகார்க‌ளை எங்க‌ளிட‌ம் அளிக்க‌லாம் அந்த புகார்கள் உரிய‌ முறையில் சைப‌ர் கிரைம் பிரிவுக்கு அனுப்ப‌ப்ப‌ட்டு ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ த‌யாராக‌ இருக்கிறோம் என்றார்.

மேலும் இது தொட‌ர்பான‌ புகார்க‌ளை கீழ் க‌ண்ட‌ முக‌வ‌ரிக்கும் அனுப்ப‌லாம் Address: Cyber Crime Cell, CB, CID, Chennai
E-mail id:
cbcyber@tn.nic.in

1 comment:

  1. 9500723742
    8012141605

    inda erandu number la irundum call pannuranunga mudalla call pannurapa edavadu pasanga per solli kekuradu adutha murai ponnunga peru solli kekuradu aduku appurama thaan anagarigama pesuradu sms anuupuranunga inda erandu number raiyum trace panni pudika mudinja mathavanungaluku padama irukum

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.