கிழக்கரை டைம்ஸ் இணைய தளத்தில் கீழக்கரையில் தரமற்ற சாலை அமைப்பது குறித்து செய்தி வெளியாகியிருந்தது இதனை தொடர்ந்து நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா வலியுறத்தலின் பேரில் கீழக்கரை நகராட்சி கமிஷனர் முஜிபுர்ரஹ்மான் பழைய பேருந்து நிலையம் அருகில் கடற்கரை பாலம் செல்லும் வழியில் போடப்பட்டுள்ள தரமற்ற சாலையை நேற்று இரவு பார்வையிட்டார்.
அவர் அப்பகுதி சாலையை சோதனை செய்து விட்டு கூறியதாவது, உடனடியாக இந்த சாலையை சீரான முறையில் அமைக்க ஏற்பாடு செய்வதாக கீழக்கரை டைம்சுக்கு தெரிவித்தார்.
இங்கு மட்டுமல்ல கீழக்கரையில் உள்ள பல்வேறு இடங்களில் தரமற்று அமைக்கப்பட்டு இருப்பதாக பொது மக்கள் கமிஷனரிடம் தெரிவித்தனர்.
உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய நகராட்சி நிர்வாகத்தின் பணி பாராட்டுக்குறியது அதே நேரத்தில் பார்வையிட்டதோடு நின்று விடாமல் கீழக்கரை முழுவதும் உள்ள சாலைகளை தரமான முறையில் அமைக்க நடவடிக்கை எடுத்தால் மக்கள் மனம் மகிழ்வார்கள்.மேலும் இது போன்ற தரமற்ற சாலைகளை அமைக்கும் காண்டிராக்டர்களை கறுப்பு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.