Friday, January 6, 2012

நகராட்சியில் 41.5 லட்சம் டெண்டரில் முறைகேடு புகார் ! க‌மிஷ‌ன‌ர் ம‌றுப்பு



டெண்ட‌ர் குழு உறுப்பின‌ரும் மூத்த‌ க‌வுன்சில‌ருமான‌ அன்வ‌ர் அலி பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியில் ,
கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியில் க‌ட‌ந்த‌ 20/12/2011 அன்று ந‌டைபெற்ற‌ 41.50ல‌ட்ச‌த்திற்கான‌ டெண்ட‌ரில் ப‌ல‌ முறைகேடுக‌ள் நடைபெற்றுள்ள‌ன.

க‌ட‌ந்த‌ ந‌க‌ராட்சி நிர்வாக‌த்தில் ப‌ல‌ த‌வ‌றுக‌ள் நடைபெற்ற‌தால் அந்த‌ நிக‌ழ்வுக‌ள் ப‌ற்றிய‌ புகார்க‌ள் அதிக‌ அள‌வு பொது ம‌க்க‌ளிட‌ம் இருந்து எங்க‌ளுக்கு வ‌ந்த‌ன‌. எனவே புதிய‌ ந‌க‌ராட்சி நிர்வாக‌த்தில் இந்த‌ குறைபாடுக‌ள் முற்றிலும் நீக்க‌ப்ப‌ட்டு தூய்மையான‌ நிர்வாக‌ம் ந‌டைபெற‌ நாங்க‌ள் விரும்புகிறோம்.

எனவே முறைகேடாக‌ 20/12/11 அன்று கீழ‌க்க‌ரை ந‌கராட்சியில் ந‌டைபெற்ற‌ டெண்ட‌ரை ர‌த்து செய்து விட்டு மீண்டும் ம‌று தேதியில் த‌வ‌றுக‌ளுக்கு இட‌ம் கொடுக்காம‌ல் முறையாக‌ டெண்ட‌ர் ந‌ட‌த்த‌ப்ப‌ட‌ வேண்டும் என‌ கேட்டு கொள்கிறோம். இவ்வாறு கூறினார் பேட்டியின் போது துணை தலைவர் ஹாஜா முகைதீன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். .

இது குறித்து கமிஷனர் முஜிப் ரஹ்மானிடம் கேட்ட போது,


எவ்வித‌ முறைகேடுக‌ளும் ந‌டைபெற‌ வாய்ப்பில்லை ஆன்லைன் டெண்ட‌ரில் எப்ப‌டி முறைகேடு நடைபெறும் .இது வீண் குற்றச்சாட்டு என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.