Tuesday, January 24, 2012

சென்னை கருத்தரங்கம் !கீழக்கரை,காயல்பட்டிணம் உள்ளிட்ட நகராட்சி தலைவர்கள் பங்கேற்பு !


நிகழ்ச்சியில் பங்கேற்ற காயல்பட்டிணம் நகராட்சி தலைவர் ஆபிதா, கீழக்கரை நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா ஆகியோர்....

கீழக்கரை நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா அருகில் கணவர் ரிஸ்வான் ராமநாதபுரம் நகராட்சி தலைவர் சேகர்,ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் அர்ச்சுணன் ஆகியோர்..


நகர உள்கட்டமைப்பு வசதி குறித்த"முனிசிபாலிகா 2012' கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் நேற்று துவங்கியது.துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக உள்ளாட்சி துறை அமைச்சர் முனுசாமி பங்கேற்றார்.

இதில், மாநகராட்சி மேயர்கள்,கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராபிய‌த்துல் காத‌ரியா, காய‌ல்ப‌ட்டிண‌ம் ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ஆபிதா உள்ளிட்ட நகராட்சி தலைவர்கள் உட்பட ஏராளமான‌ உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

க‌ருத்தரங்கையொட்டி அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில்;உள்ளாட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், குடிநீர் வாரிய திட்டங்கள்,நீர்நிலைகள் மேம்பாடு,மெட்ரோ ரயில் திட்டம்,மாநகராட்சி திட்டங்கள்,சி.எம்.டி.ஏ., விதிமுறைகள் விளக்கம்,நெடுஞ்சாலைத் துறை திட்டங்கள்,நவீன திடக்கழிவு மேலாண்மை உபகரணங்கள்,எரிசக்தி துறை உபகரணங்கள்,காற்றாலை மாதிரிகள் ஆகிய‌ தலைப்புகளில் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. கண்காட்சியில் கலந்து கொண்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் இவற்றை பார்த்து, விளக்கங்களை பெற்றனர்.

இது தவிர, ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற வளர்ச்சி திட்டம், நகர்புற உள்ளாட்சிகளுக்கான நிர்வாக திறன், பேரழிவு மேலாண்மை உள்ளிட்டவைகள் குறித்து விவாதம் நேற்று பிற்பகலில் நடந்தது.நகர உள்ளாட்சிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு குறித்து கருத்தரங்கில் பேசப்பட்டது.

க‌ருத்தரங்க‌‌ம் ஆங்கில‌த்தில் நடைபெற்றதால் காயல்பட்டிணம் நகராட்சி தலைவர் ஆபிதா, கீழக்கரை நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா உள்ளிட்ட பெரும்பாலான‌ உள்ளாட்சி பிர‌திநிதிக‌ள் க‌ருத்துக்க‌ள் புரிய‌வில்லை என‌ புகார் தெரிவித்த‌ன‌ர்.இது குறித்து கருத்து தெரிவித்த அதிகாரிகள கருத்தரங்கம் முடிந்த பிறகு, இங்கு பேசிய விஷயங்கள் தமிழில் தொகுத்து வழங்கப்படும் என‌ தெரிவித்த‌ன‌ர்.
கருத்தரங்கத்தை த‌மிழிலேயே ந‌ட‌த்தியிருக்க‌லாம் என‌ பெரும்பாலானோர் க‌ருத்து தெரிவித்த‌ன‌ர்

2 comments:

  1. க‌ருத்தரங்க‌‌ம் ஆங்கில‌த்தில் நடைபெற்றதால் காயல்பட்டிணம் நகராட்சி தலைவர் ஆபிதா, கீழக்கரை நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா உள்ளிட்ட பெரும்பாலான‌ உள்ளாட்சி பிர‌திநிதிக‌ள் க‌ருத்துக்க‌ள் புரிய‌வில்லை என‌ புகார் தெரிவித்த‌ன‌ர். Appreciate said complaint recorded by our Chairman, however so many "MANGUSTANS" may came out from the CONFERENCE by saking their head without understanding the SUBJECT.

    ReplyDelete
  2. idhil irundhu enna thearihiradhu. kilakarai,kayalpattinam pondra muslim ooruhalil penghalai chairmangal akki muslim ooruhalai puram thalla nadakum sadhi.so kilakarai kayalpattinam pondra oorhalil nalla padipum anubavamum niraindha aangal chairmangal aaha veandrum

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.