Wednesday, January 4, 2012

கீழக்கரையில் 37.5பவுன் நகை திருட்டு !





கீழக்கரை மேலத்தெருவை சேர்ந்த துபாயில் வசிக்கும் முகம்மது அலி(32) திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக குடுமபத்துடன் கீழக்கரை வந்திருந்தார்.
திருமண விழாக்களில் கலந்து விட்டு தனது வீட்டிலிருந்து நேற்று துபாய் புறப்படுவத‌ற்க்கு ஆயத்தமான நிலையில் தனது கைபையில் 37.5 பவுன் நகையை வைத்துள்ளார்.சிறிது நேரத்தில் கைபையை திறந்து பார்த்த போது கைபையின் ஓரம் அறுக்கப்பட்டிருப்பதையும்,நகைகள் இல்லாமல் இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இத‌னைய‌டுத்து கீழ‌க்க‌ரை காவ‌ல்நிலைய‌த்தில் புகார் அளித்த‌தின் பேரில் வழக்கு பதிவு செய்து டிஎஸ்பி முனிய‌ப்ப‌ன் த‌லைமையில் இன்ஸ்பெக்ட‌ர் இள‌ங்கோவ‌ன் எஸ்.ஐ ராம‌நாத‌ன் அட‌ங்கிய‌ குழு விசார‌ணை செய்து வ‌ருகின்ற‌ன‌ர்.மோப்ப‌ நாய் வரவழைக்கப்பட்டது,கைரேகை நிபுண‌ர்க‌ளும் விரைந்து வ‌ந்த‌ன‌ர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.