Sunday, January 8, 2012

கீழக்கரை கல்லூரியில் 500 மாணவர்களுக்கு புதிய தொழில் நுட்ப பயிற்சி !



கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியும் சென்னை கே.கே.எம் மென்பொருள் தனியார் துறையும் இணைந்து மாணவர்களுக்கான இருபரிமாணம் ,முப்பரிமாணம் போன்ற மென்பொருள்களை உருவாக்கி பயிற்சி அளிப்பது சம்பந்தமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

இவ்விழா சென்னை அருகில் உள்ள சிறுநேரி முகம்மது சதக் கட்டிட கலை அறிவுசார் மையத்தில் நடைபெற்றது.இதில் கே.கே.எம் மென்பொருள்துறையின் மேலாண்மை இயக்குநர் ராமசாமி மற்றும் முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் ஹமீது அப்துல் காதர் ஆகியோர் 3 வருட ஒப்பந்ததில் கையேழுத்திட்டனர்.இதன் மூலம் 500 மாணவர்கள் புதிய தொழில் நுட்பங்களை கற்று கொள்ள முடியும்

கேகேஎம் நிறுவனத்தின் இயக்குநர் பேசுகையில் ,கட்டிட கலையும்,அடிப்படை தேவைகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.மேலும் வருங்கால தேவைகளுடன் புது புது மாற்றங்களும் வந்து கொண்டிருக்கிறது.ஆகையால் எங்கள் நிறுவனம் மாணவர்களுக்கு புது விதமான தொழில் நுட்பங்களை அளிக்கிறது.இந்த ஒப்பந்தத்தின் மூலம் முகம்மது சதக் கட்டிட கலை,இயந்திர பொறியியல் கட்டிடவியல் மாணவர்களுக்கு தேவையான திறன்களை வெளி கொண்டு வர முடியும் .இவ்வாறு அவர் பேசினார்.

பட விளக்கம்:-முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் ஹமீது அப்துல் காதர் ,கே.கே.எம் மென்பொருள்துறையின் மேலாண்மை இயக்குநர் ராமசாமியிடம் இருந்து புரிந்துணர் ஒப்பந்தத்தை பெற்று கொள்கிறார்.அருகில் கல்லூரி முதல்வர் ஜகாபர்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.