Thursday, January 5, 2012

கீழக்கரை நகருக்குள் மீண்டும் மின் கட்டண அலுவலகம் !







பட விளக்கம் : கீழக்கரை பேருந்து நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மின் கட்டண அலுவலகம் அமைக்க மின்சாரத்துறை உயர் அதிகாரி பாண்டியன் இடத்தை பார்வையிட்டார்.

கீழக்கரை நகரில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மின் கட்டண அலுவலகம் மாற்றப்பட்டு ஊருக்கு வெளியே வண்ணாந்துரை அருகே செயல்பட்டு வருகிறது.இதனால் மின் கட்டணம் செலுத்த பொது மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாயினர்.இதனால் மீண்டும் ஊருக்குள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.நகராட்சி தேர்தலின் போது வேட்பாளர்கள் பலரும் "ஊருக்குள் மின் கட்டண அலுவலகத்தை கொண்டு வருவோம்" என்பதையும் முக்கிய வாக்குறுதியாக அறிவித்திருந்தார்கள் அந்த அளவுக்கு பொதுமக்களை மிகவும் பாதித்த விசயம்.


இந்நிலையில் தற்போதைய கீழக்கரை நகராட்சி நிர்வாகம் மின் கட்டண அலுவலகம் அமைக்க புதிய பேருந்து நிலையத்தில் இடம் தருவதாக அறிவித்ததின் பேரில் இன்று காலை மின்சார‌த்துறையின் உயர் அதிகாரி பேருந்து நிலையத்தில் உள்ள‌ இடத்தை பார்வையிட கீழக்கரை வந்தார்.அவருடன் கீழக்கரை நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா,துணை தலைவர் ஹாஜா முகைதீன்,கவுன்சிலர் அன்வர் அலி ,ரிஸ்வான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


இது குறித்து மின் வாரியத்துறை உயர் அதிகாரி கூறுகையில் ,
கட்டண அலுவலகம் ஊருக்குள் அமைக்க கீழக்கரை நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா பல முறை எங்களிடம் வலியுறுத்தி வந்தார்.கீழக்கரை பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் ஊருக்குள் அமைக்க நாங்கள் தயாராக உள்ளோம்.தற்போது பேருந்து நிலையத்தில் அமைக்க இடத்தை பார்வையிட்டுள்ளேன் இங்கு கட்டண அலுவலகம் அமைத்து முதல்கட்டமாக‌ வாரத்தில் 3 நாட்கள் மட்டும் செயல்படுத்த பரிசீலனை செய்கிறோம்.விரைவில் இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.