Friday, January 6, 2012

மலிவு விலை ஆந்திர‌ சீலா மீன்கள் கிலோ ரூ500க்கு விற்பனை !


உள்ளூர் கடலில் பிடிபட்ட மீன்கள்


கீழக்கரை பகுதியில் மலிவு விலையில் கிடைக்கும் ஆந்திர சீலா மீன்கள உள்ளூர் கடலில் பிடிபட்டது என்று கூறி கிடைக்கும் மீன்களை அதிக விலைக்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

மீன் வகைகளில் ருசி மிகுந்தது சீலா என்ற வஞ்சிரம் மீனாகும். இந்த மீன்களுக்கு எப்போதுமே நல்ல கிராக்கி இருக்கும். கீழக்கரை மற்றும் வாலிநோக்கம் பகுதியில் பிடிபடும் சீலா மீன்கள் மிகவும் ருசியுடன் இருக்கும். இந்த மீன்கள் அதிக விலை போகும். ஆனால் ஆந்திர கடல் பகுதியில் பிடிபடும் சீலா மீன்கள் ருசி குறைவானது. இதன் விலை மிகவும் குறைவு.

ஆந்திர கடல் பகுதியில் பிடிபடும் மீன்களை சிலர் சென்னை வழியாக கீழக்கரை பகுதிக்கு கொண்டு வந்து உள்ளூர் பகுதியில் பிடிபட்ட சீலா மீன்கள் எனக்கூறி கிலோ ரூ.500 வரை விற்று விடுகின்றனர். மேலும் எலக்ட்ரானிக் தராசு இல்லாமல் கை தராசு மூலம் எடையிலும் மோசடி செய்து விற்பதாக சிலர் புகார் கூறுகின்றனர். ஆந்திர பகுதியில் பிடிபடும் சீலா மீன்களுக்கும், கீழக்கரை, வாலி நோக்கம் பகுதியில் பிடிபடும் சீலா மீன்களுக்கும் வித்தியாசம் உண்டு. எனவே வியாபாரிகள் ஆந்திரா மீன்களின் விலையை குறைத்து விற்க வேண்டும்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த முன்னாள் தமுமுக சேர்ந்த முஜீப் கூறுகையில் , , ‘
ஆந்திரா பகுதி சீலா மீன் கிலோ ரூ.90க்குத்தான் அந்த பகுதிதியில் விற்கப்படுகின்றன. கூடுதல் விலைக்காக அந்த பகுதி மீன்களை கீழக்கரை பகுதிக்குகொண்டு வந்து சிலர் மோசடியாக விற்கின்றனர். 90 ரூபாய் மீனை ரூ.500 கொடுத்து வாங்கி சிலர் ஏமாறுகின்றனர். கைத்தராசு மூலம் எடையிலும் மோசடி செய்யப்படுகிறது. வீட்டிற்கு கொண்டு சென்று எடைபோட்டு பார்த்தால் 200 கிராம் எடை குறைகிறது. இதுகுறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்றார்.

2 comments:

  1. (90)rs is wrong news.andhra fish price 250to280 only 10kg down.10kg up 330to370.wholesale price.

    ReplyDelete
  2. 90(rs)wrong news,andhra seela fish 10kg down wholesale price 230(rs) to 280.10kg up 300 to 330.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.