Tuesday, January 3, 2012

கீழக்கரையில் அரைகுறையாக‌ அமைக்கபடும் தரமற்ற சாலைகள் !




கடற்கரை பாலம் செல்லும் வழியில் தரமற்ற முறையில் புதிய‌ ரோடு அமைக்க‌ப்ப‌ட்டு ஒரே நாளில் சேத‌ம‌டைந்துள்ள‌த்தை காணலாம்

கீழக்கரை நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக ஆட்சி காலத்தில் நிதி ஒதுக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

அவசரமாக நடைபெறும் இந்த பணிகள் தரமற்று இருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.ஏற்கெனவே பழுதடைந்த சாலைகளை அகற்றாமல் அதன் மேற்புறத்தில் மிகவும் தரமற்ற வகையில் அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது.மேலும் அரசின் உத்தரவுபடி 3 இன்சு தடிமன் குறையாத வகையில் புதிய ரோடுகள் அமைக்க வேண்டும் ஆனால் தற்போது அமைக்கப்படும் சாலை 1.5 இனச்சுக்கும் குறைவாக உள்ளது.எனவே உட‌ன‌டியாக‌ ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் த‌லையிட்டு சாலைக‌ள‌ த‌ர‌மாக‌ அமைக்க‌ நட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என்று பொது ம‌க்க‌ள் கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்.
இது குறித்து கலீல் என்பவர் கூறுகையில் ,த‌ற்போது அமைக்கப்பட்டு வரும் சாலை ஒரு மாத‌த்திலேயே காண‌ம‌ல் போய் விடும் அந்த‌ அளவில் தான் சாலைக‌ள் அமைக்க‌ப்ப‌டுகிற‌து.சென்ற‌ ஆட்சியில் காண்ட்ராக்ட் எடுத்த‌ ஒப்ப‌ந்த‌ரார்க‌ள் தற்போதுதான் சாலைக‌ளை அரை குறையாக‌ அமைத்து வ‌ருகிறார்க‌ள்.ஆனாலும் த‌ற்போதைய‌ ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் இது குறித்து த‌லையிட்டு அரை குறை ப‌ணிக‌ளை நிறுத்தி த‌ர‌மான‌ முறையில் அமைக்க‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும்.இது போன்ற‌ சாலைக‌ள் ந‌கராட்சிக்கு அவ‌ப்பெய‌ரை உண்டாக்கும் என்ப‌தில் ச‌ந்தேமில்லை என்றார்.

1 comment:

  1. சாலையில் கருப்பு வண்ணம் பூசி இருக்கிறார்கள்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.